Saturday, August 8, 2015

காவல் துறைக் கலாச்சாரம்...!



மது விலக்கை வலியுறுத்திக் தமிழகம் பொங்கிக் கொண்டிருக்கிறது.
இதில் அரசியல் விளையாட்டு எந்த அளவு இருக்கிறது.? அல்லது
ஒரு தெளிவான மக்கள் போராட்டத்தைக் கொஞ்சப்படுத்த, அதனை அரசியலென ஏளனப்படுத்தும் அவலம் எந்த அளவு இருக்கிறது?
என்கிற செய்தி ஒருபுறம் இருக்கட்டும்.

இதையெல்லாம் தாண்டி எனக்கு வேறுசில நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகள் களத்தில் இன்று இருக்கின்றனர். ஆனால் இந்த அப்பாவிகளைக் காவல் துறை, கைது செய்து வேனில் அவர்களை ஏற்றித் தொலைதூரத்தில் கொண்டு போய் இறக்கி விட்டு வேதனைப்
படுத்தி யுள்ளது.

இது கோரமான கொடுமை. ஈவிரக்கமற்ற ஈனத்தனம். மன்னிப்பு என்ற ஒன்றை வழங்கவே கூடாத கேவலமானது. இதை எந்த வெட்க உணர்வு சிறிதும் இன்றி தமிழக அரசும், ஜெயலலிதா ஆணவ ஆட்சியும் நிகழ்த்தியுள்ளன.

அண்ணாமலையில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய போதும்
தி.மு.க.அரசும் கருணாநிதி காவல் துறையும் மாணவர்கள் மத்தியில் இதைக் கடைபிடித்தன.

மாணவர்களை லாரியில் ஏற்றி இரவில் அடையாளம் தெரியாத இடத்தில் வெறும் ஜட்டியுடன் இறக்கி விட்டன.

கருணாநிதிக்குப் பின்னர் எம்.ஜி ஆர்.ஆட்சிக் காலம். அ.இ.அ.தி.மு.க.அரசு கோட்டையை ஆண்ட வேளை.

கல்வி அமைச்சர் அரங்க நாயகம். அப்போது ஒரு ஆசிரியர் போராட்டம் நடந்தது.

அப்போதும் காவல் துறை இதே போக்கைத்தான் கடைபடித்தது.
ஆசிரியர்களை எங்கெங்கோ தொலை தூரத்தில் கொண்டுபோய் தூவி விட்டது.

இன்று மாற்றுத் திறனாளிகளிடம் இந்தக் கைகரியத்தைக் கரிசனையுடன் காட்டியுள்ளது.

இந்தக் கேவலக் கோட்பாடு, ராஜதந்திரம் என்பது போல கடைபிடிக்கப்படுகிறது . ஜனநாயக முகத்தில் சாணியடிப்பு நடந்துள்ளது. மனித மாண்புகளின் மீது அரசும் ஆட்சி அதிகாரமும் வன்புணர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

No comments:

Post a Comment