Monday, August 3, 2015

சௌந்தர்யம்...! -4-



அதிசயத்தின்
தலையில் மணிமகுடம்...!

(காலமென்னும்
பாய் சுருட்டப்படும் பொழுது
கடந்த சம்பவங்கள்
உள் வாங்கிக் கொள்கின்றன. ..!

அவைகள் அழிந்து போவதில்லை
இடம் மாறித் தடம் சிதைந்து
உதிர்ந்து போய் விடுகின்றன...!

மற்றும் ஓர் முறை இயேசு பிரான்
வருகை மக்தலேனாவின்
நகருக்குக் கருணையாக்கப்படுகிறது. ..!

இந்த முறை மக்தலேனா
பூரிப்பில்
அவரை வரவேற்கவில்லை. ..!

சோகச் சேற்றைப்
பூசிக் கொண்டவளாக
அழுத் கரைந்து
புலம்பிக் கொதித்து
இயேசு பிரான் முன்னே நிற்கிறாள்...!

அவளின் மாற்றங்களைக்
கண்ட இயேசு பிரான்
பழைய பிரகாசமான
புன்சிரிப்பில் தரிசனப்படுகிறார்...!)

இயேசு பிரான்:---
என் மகளே...!
என்ன அலங்கோலம். .?
பரிசுத்த ஜீவனுக்கு ஆகாதே...!

புலம்புதல்
சாத்தானின் கீதமல்லவா...?

உனக்குள் இருக்கும்
மாணிக்கத்தில் மறுபடியுமா
குப்பைகளைக் கொட்டுகிறாய். ..?

மக்தலேனா:---
போதகரே...என் உயிரே...!
சுத்தப்படுத்த நீர் இருக்கின்றீர். ..!
அசுத்தம் பற்றி
எனக்கு அக்கறையில்லை...!

நடந்துவிட்டது
என்ன தெரியுமா..?

என்ன பாசத்துக்கெல்லாம்
உரிமை பெற்ற
ஒரே தம்பி... என் லாசர்...!

அவனை
அகால மரணம்
விழுங்கி விட்டதே...!

நாள் சிலதான்
நர்ந்துள்ளன. ..

ஆனால்
நரகத் சூடு
என்னையல்லவா
நெருக்கிக் கொண்டே இருக்கிறது...?

போதகரே...!
என் சகிப்புக்கும் மேலாக
அந்தச் சம்பவம்
என்னைப் பாதித்து விட்டது...!

ஓர் புல் தலை நுனியில்
பனித் துளி விழலாம்
அனல் கங்குக் கொட்டப்படலாமா. .?

போதகரே...!
நான் நம்புகிறேன்...
நான முழுமையாக நம்புகிறேன்...!

அன்று மட்டும் நீர்
என்னோடு இருந்திருந்தால்...!

மரணத்தின் வாய்
என்ன சகோதரனைப்
புசித்திருக்க முடியாது...!
இது சத்தியம்...!

முதுமையும் நோயும்
மரணத்திற்கு வாகனங்கள்...!
இதை அங்கீகரிக்க முடிகிறது...!

இளமையும் அகாலமும்
அதற்கு விலக்காக வேண்டாமா..?

போதகரே...,
அனுபவித்த பின்வரும் முதுமையே
என்ன சகோதரனுக்கு
மரண அறிவிப்பாகட்டும்...!
நீரே ! வழி செய்யும்...!

(கதறிக் கதறி மக்தலேனா அழுகிறாள்...!
இயேசு பிரானின் ஆழிய விழிகளில்
இமைகளை நகர்த்தி மூடித் திறக்கிறார்...!
ஏதோ ஓர் அதிசயம் அங்கே நிகழப் போகிறது...!)

இயேசு பிரான்:---
மகளே...!
அழுகை வேண்டாம்..!
அது
இயலாமையின்
மதிபட்டு உதிரும் கழிவுநீர்...!

நம்பிக்கை...

விதிகளை நகர்த்திக்
குப்புறத் தள்ளிவிடும்
பிரகாசப் பெருபெருவெள்ளம். ..!

எனக்குள்
ஓர் ஆணை
பிறப்பிக்கப் பட்டுவிட்டது...!

உன் சகோதரன்
சமாதி எங்கே...?
அழைத்துச் செல்...!

மக்தலேனா:---
என் போதகரே...!
புண்ணியத்தின் பிரவாகத்தை
என்னால் தாங்க முடியவில்லை...!
நிலை தடுமாறுகிறது. ..!

வாரும். ..வாரும்...!

என்ன சகோதரன் சமாதி நோக்கி
வாரும்...!வாரும்...!

( மக்தலேனா, தம்பி லாசர் சமாதி நோக்கி ஓடுகிறாள்...!

ஊர்மக்கள் ஆச்சர்யத்திற்கு ஒப்புக் கொடுத்தவர்களாக
அலைமோதிச் செல்கின்றனர்...!

இயேசு பிரான்...மட்டும் ஆழ்ந்த அமைதியில்
என்றுமுள்ள நிதானத்தில் நடக்கிறார்...!
சமாதி நெருங்கி விட்டது...!
ஜீவப் பிரகாசம் சுடர் பரப்பி நிற்கிறது...!)

இயேசு பிரான்:---
சமாதியை மூடியிருக்கும்
இந்தக் கல்லினை
அப்புறப்படுத்துங்கள். ..!

(பலர் சேர்ந்து சமாதிக் கல்லை நர்த்துகிறார்கள்.!)

ஏ...லாசரே. ..!
ஏ...பிரேத மனிதனே...!
எழுந்து...வா...!

( பக்கத்து ஊர் சென்றவன் திரும்பி வந்தது போல
கல்லறை மனிதன் எழுது வெளிப்பட்டான். ..!
அதிசயத்தின் தலையில் அன்றுமோர்
மணிமகுடச் சூட்டு விழா சம்பவம் நிகழ்ந்தது...!)

மக்தலேனா:---
போதகரே...!போதகரே...!
எங்களின்
ஜீவ அர்ப்பணம் உமது திருமுன்பே...!

( மக்தலேனாவுக்கு வார்த்தைகள் வரவில்லை..!
எழுந்து சென்று சகோதரனை அணைக்கிறாள். ..!
எதுவுமே நடந்து விடாத மாதிரி இயேசு பிரான்
மெல்ல...மெல்ல...நகர்கிறார்...!சென்று மறைகிறார். ..! )

No comments:

Post a Comment