Tuesday, June 7, 2016

தேர்தல் களமும் அரசியல் இயக்கங்களும்



இன்றைய இந்திய அரசியல் இயக்கங்களில் சில பல மாறுபட்ட கூறுகள் இருக்கின்றன.

தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், மதவழிக் கட்சிகள், ஜாதியவழிக் கட்சிகள், மொழி, இன வழி இயக்கங்கள் இப்படிப் பல முகங்கள் காணக் கிடக்கின்றன.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாரதீய ஜனதா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இவைகள் தேசியக் கட்சிகள்.

தி.மு.., ...தி.மு., பா.., தே.மு.தி.. .தி.மு. போன்றவை மாநிலக் கட்சிகள்.
 
அதே போல, கேரளம், மேற்கு வங்கம், பீஹார், அஸ்ஸாம், .பி, சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா, .பி, மராட்டியம், குஜராத், கர்னாடகா, பஞ்சாப், டில்லி போன்ற மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் இருக்கின்றன.
தேசியக் கட்சிகளில், காங்கிரஸ் இந்தியாவை ஆண்டு பழகிய கட்சி.
பா... ஆண்டு கொண்டிருக்கும் கட்சி.

கம்யூனிஸ்டு கட்சிகள் முந்தையக் கால கட்டங்களில் பலமான எதிர்க் கட்சியாகத் திகழ்ந்து, இப்போது கரைந்து கொண்டிருக்கும் கட்சி.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப் பட்ட கட்சி.
 
தமிழ் மாநிலத் தேர்தலுக்கு வருவோம்.

தேசியக் கட்சியான காங்கிரஸ் தமிழகத்தைப் பொருத்தவரை அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஆட்சி பீடத்தை அலங்கரித்த கட்சி.

மாநிலக் கட்சியான தி.மு. வும், ராஜாஜியின் சுதந்திராக் கட்சியும், இந்தியன்யூனியன் முஸ்லிம் லீகும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்
ஒன்றிணைந்து காங்கிரஸை ஆட்சி பீடத்திலிருந்து குப்புறத் தள்ளின.
 
அன்று விழுந்த காங்கிரஸ் இன்றுவரை சவலைப் பிள்ளையாகத் திரிகின்றது.
காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டிருந்த காலத்திலும் சுமார் 35 விழுக்காட்டுக்குள்தான் வாக்குகள் பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது.

அப்போது அக்கட்சி மகத்தான தலைவர்களைப் பெற்றிருந்தும் இதுதான் நிலை.
 
ஓமந்தூரார் இருந்தார்.ராஜாஜி ஆண்டார். பெருந் தலைவர் காமராஜர் தலைமை தாங்கினார். எனினும் இதுதான் விதியாக இருந்தது.

சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்த போதும் 65 சதவிகிதத்திற்கும் மேலுள்ள தமிழக மக்கள் காங்கிரஸை ஆதரிக்க வில்லை.

சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஒன்று திரண்டு போராடிய பெரும் பான்மை மக்கள், காங்கிரஸ் தனி அரசியல் கட்சியாகப் புறப்பட்ட வேளையில் பெரும் பான்மை சதவிகிதத்தைத் தர மறுத்து விட்டார்கள்.
தேசிய கட்சியான காங்கிரஸ், மாநிலக் கட்சியான தி.மு. வின் நிழல் தேடி வந்து பதுங்கிக் கொண்ட கட்சியாகி இந்தத் தேர்தல் களத்தைக் கண்டது.
சிறுபான்மை பிரதிநிதித்துவ அரசியல் இயக்கமான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தனது நெடிய நீண்ட நோக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவி வந்தது.

"முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதித்துவ சபை இது " என்ற சொல்லாடலை மட்டும் வைத்துக் கொண்டு தானே தன்மீது மூடு திரையை போட்டுக் கொண்டுக் குட்டிக் குட்டித் துண்டுகளாகச் சிதறி வடிவ நேர்த்தி இழந்து விட்டது.

யூனியன் முஸ்லிம் லீக், பதவி தேவை கருதித் தன் தேர்தல் சின்னத்தை
இழக்கவும் தயாரானது. கூட்டணி தி.மு. வின் முஸ்லிம் சிறுபான்மை
பிரிவுதான் தமிழ் மாநில முஸ்லிம் லீக் என யூனியன் முஸ்லிம் லீகின் அனுமதியோடு நீதி மன்றங்களில் எந்தச் சங்கடங்களும் இல்லாமல் தானே
முன் வந்து சாட்சி சொன்னது. சட்டம் கழுத்தை நெறிக்க வில்லை என்றால்
இன்று கூட தன் சொந்தச் சின்னத்தை முஸ்லிம் லீக் தூக்கி வந்திருக்காது.

இன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தி.மு. வின் தோளில் கிடக்கும்
மஞ்சள் நிறத் துண்டின் நூலிழையாகப் பின்னிப் பிணைந்து கிடக்கும் கட்சியாகச் சுருங்கிப் போனது.

தி.மு. விலிருந்து கழன்று வெளியேறி வீங்கிப் பெருத்திருக்கும் ...தி.மு. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சி. இன்று சில ஜாதிய மத குறுங் கட்சிகளை இணைத்துக் கொண்டு அந்தக் கட்சிகளுக்கும் தனது சின்னத்தையே வழங்கி தன் கட்சியாக ஜீரணித்து ஆட்சியைப் பிடித்திருக்கும் கட்சி.

பா.., தனித்து நின்று பிற துக்கடா ஜாதி அமைப்புகளை கை விரல்களில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்த கட்சி.

பாட்டாளி மக்கள் கட்சி, டாக்டர் ராமதாஸ் கைங்கரியத்தால் தோன்றிய கட்சி.
 
55 ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர் ராமசாமி படையாச்சிக் கைவசம் வைத்திருந்த உழைப்பாளர் கட்சியின் நவீன வடிவம்தான் இன்றைய பா.. கட்சி.

ராமசாமி படையாச்சியார் தமது சமூகத்தார்களை உழைப்பாளர் என்றார்.
ராமதாஸ் தமது சமூகத்தார்களை பாட்டாளிகள் என்றார்.

இந்த வேறுபாட்டை தவிர மீதியெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. இருவர் சமூகமும் ஒன்றேதான்.

இந்த இடத்தில் தமிழகத்தின் ஒரு அரசியல் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.1957--க்குப் பின் தமிழகச் சட்ட மன்றத்தில் இரு பெரும் சமுதாய உறுப்பினர்கள் கணிசமான அளவு தொடர்ந்து இன்றுவரை இருந்து வருகின்றனர். ஆனால் பலப்பல கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஒரு சமுதாயம் வன்னியர் சமுதாயம். பிரிதொரு சமுதாயம் தேவர் குல சமுதாயம்.

ஒவ்வொரு சட்ட மன்றத்திலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்த்து வன்னியர் சுமார் 65 பேர் தேர்வாகி வருகிறார்கள். அதே அளவு தேவர் சமூகத்தவர்களும் சட்ட மன்றத்தில் உறுப்பினர்களாக வருகிறார்கள்.
அனைத்து அமைச்சரவைகளிலும் குறைந்த பட்சம் 5 அல்லது 6 அமைச்சர்கள் இந்த இரு சமுதாயத்தில் இருந்தும் வந்து விடுவார்கள்.

பெருந்தலைவர் காமராஜர், ராமசாமி படையாச்சியாரை காங்கிரஸுக்குள் இழுத்து அமைச்சர் பதவியைக் கொடுத்து உழைப்பாளர் கட்சியைக் காணாமல் ஆக்கி விட்டார்.

அதே காமராஜரால் தேவர் சமுதாயத்தை இழுக்க முடியவில்லை. பார்வடு பிளாக் கட்சியைக் காங்கிரஸுக்குள் கரைக்க முடிய வில்லை. இதற்குக் காரணம் தேவர் சமுதாயம், பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் என்னும் பீஷ்மர் கட்டுப் பாட்டில் இருந்தது.

ஆனால் கால ஓட்டத்தில் இச் சமூகத்தை எம்.ஜி.ஆர். சுவீகரித்துக் கொண்டார்.அதைப் பின்பற்றி அச் சமூகத்தை ஜெயலலிதா தன் விழிப் பார்வைக் குள்ளேயே வைத்துக் கொண்டார்.

கம்யூனிஸ்டு கட்சிகள், தமிழகத்தின் மற்றும் சில மாநிலக் கட்சிகளின்
பக்க வாத்தியங்களாகப் பங்களிக்கும் கட்சியாகத் தவறிப் போய் விட்டன.
இந்தத் தேர்தல் களத்திலே முனைப்புக் காட்டிய இன்னும் பல கட்சிகளைத்
தனியாக விமர்சிக்க வேண்டும். அவற்றைப் பின்பொரு முறை வைத்துக் கொள்ளலாம்.

இந்தத் தேர்தல் களத்தில் இரண்டு கட்சிகளை உற்று நோக்க ஆசைப்படுகிறேன். ஒன்று பா... மற்றொன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.

அடுத்து பா.. வைத் தொடர்கிறேன். அதற்கு அடுத்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகைத் தேர்வு செய்கிறேன்.
--- தொடர்ந்து சிந்திப்போம்.---

No comments:

Post a Comment