Sunday, March 3, 2013

இப்படியும் ஒரு சுய பரிசோதனை!


ப்படியும்  ஒரு சுய பரிசோதனை!

 1.3.2013 அன்று காலை 8.30 மணிக்குப் பொதிகைத் தொலைக் காட்சியில் ஒருவர் காந்தியச் சிந்தனையை 3 நிமிடங்கள் பேசினார் .

அவர் பேசியதின் சுருக்கம் :-

"காந்தியும் அவர் மனைவி கஸ்தூரி பாயும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரயில் நிலையத்திற்கு வந்தார்கள். 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்ற கோஷங்கள் சில நிமிடங்கள் வரை அங்கே ஒலித்தன . அது அடங்கிய உடன் 'கஸ்தூரி பாய்க்கு ஜே !' என்ற ஒரு ஒற்றை குரல் ஓங்கி ஒலித்தது.

அந்த ஒற்றை குரல் வந்த திசையைக் கூட்டத்தினர் திரும்பிப் பார்த்தனர் . அந்த இடத்தில் ஹரிதாஸ் காந்தி நின்று கொண்டிருந்தார். அவர்தான் அந்த கோஷத்தை எழுப்பியவரும் கூட. தாயார் மீது அவருக்கு பாசம் அதிகம்.

ஹரிதாஸ் காந்தி, காந்தியின் மூத்த மகன். காந்திஜியை மகாத்மாவாகக் கூட அல்ல,மனிதனாகக் கூட அவர் மதிப்பதில்லை. குடும்ப வாழ்க்கையை வாழத் தகுதியற்ற ஒரு மட்ட ரகமான பிறப்பாகக் காந்தியை ஏசிப் பேசக் கூடியவர்.
ஹரிதாஸ் காந்தி ஒரு மகாக் குடிகாரர் .

ஒரு முறை ஹரிதாஸ் காந்தியைப் பற்றிக் காந்திஜியிடம் கேட்ட போது, "அவன் குற்றவாளி அல்லன். நான் பெரும் காமுகனாக இருந்த கால கட்டத்தில் பிறந்தவன் ஹரிதாஸ் காந்தி. அதனால் தான் இப்படி இருக்கிறான்" என்று  காந்தியடிகள் பதில் தந்தார். - இப்படி பொதிகையில் அவர் பேசி முடித்தார்.

'காந்திஜியின் சுய விமர்சனத்தின் உச்ச கட்டப்  பொறுப்புணர்ச்சி இது' என பாராட்டப்படுகிறது. ஹரிதாஸ் காந்தி ஹிந்துவாக இருந்து ஒரு ஹிந்துப் பெண்ணை திருமணம் முடித்தார். கிறிஸ்துவ மதத்திற்கு மாறி ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மணமுடித்தார். இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெண்ணை நிகாஹ் செய்தார். மிதமிஞ்சி குடித்து விட்டு தெருக்களிலும் பிளாட்பாரங்களிலும் படுத்துக் கிடந்தார்.

இதற்குரிய  காரணங்கள் தனக்குள் இருப்பதாக காந்திஜி ஒப்புக் கொள்கிறார்.

இப்போது நமக்கு ஒரு டவுட் !

ஹரிதாஸ் காந்தியின் தவறுக்குக் காந்தியுடைய இளமைத் தவறு காரணம் என்றால், காந்திஜியின் இளமைத் தவறுக்குக் காந்திஜியின் அப்பாதானே காரணமாக இருக்க முடியும் ?

 இப்படி அப்பாவுக்கு அப்பா, அவருக்கு அப்பா என்று போனால், எங்கே சென்று முடிவது?

காந்திஜி ரொம்பவும் கெட்டிக்காரர் தான். தவறுகளுக்குத் தந்தைமார்களைப் பழி கூறித் தப்பிக் கொள்கிறார்.

இவருடைய மகாத்மாவான உத்தமதனத்திற்கு எந்த அப்பாக்கள் காரணம் ? இங்கே அப்பாக்களை காரணம் காட்ட முடியாது. ஏனென்றால், இரண்டு மூன்று அப்பாக்களுக்கு ஒரு குழந்தைப் பிறக்க முடியாது.

உத்தமத் தன்மைகளுக்கு தாங்களே பொறுப்பு எனவும், தவறுகளுக்கு தந்தைமார்களே காரணம் எனவும் பழி தூக்கிப் போடுவது எந்த மாதிரி விஞ்ஞானம்? என்ன மாதிரி தத்துவம்? எனப் புரியவில்லை.
புரிந்தவர்கள் விளக்கிக் கூறுங்கள். 

No comments:

Post a Comment