Sunday, March 3, 2013

கண்டெடுத்த கவிஞன் தா.காசிம் - 2




ன்னூல் ஆசிரியர் அறிஞர் M .R .M. அப்துற்- றஹீம் சாஹிபின் யுனிவர்சல் அச்சகத்திலும் பணியாற்றினார். M .R .M அப்துற்- றஹீம் கவிஞரின் இலக்கிய குரு. அவரிடமே யாப்பிலக்கணம் முறையாகப் பயின்றார்.

காயிதே மில்லத் அவர்கள் மனைவியார் ஜமால் ஹமீதா அம்மையார் மரணம் அடைந்து விட்டார். அந்த மரண ஊர்வலத்தில் காயிதே மில்லத் முன்னால் நடந்து வந்தார்கள்.

கவிஞர் காயிதே மில்லத்தின் அந்த நடையால் ஆழமாகப் பாதிக்கப்பட்டார். அன்றே முஸ்லிம் லீக் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இஸ்லாத்திற்குள்ளும் முழுமையாக நுழைந்து விட்டார். காயிதே மில்லத்தின் ராஜ நடை, கவிஞரின் நாத்திகத்தை நொறுக்கி விட்டது.

கவிஞர் தன் மரணம் வரை முஸ்லிம் லீகின் தொண்டராகவே தொடர்ந்தார். இப்படியும் சொல்லலாம் - தொண்டர்களின் ஏக போக முன்மாதிரியும் இவர்தான் என்று.

நாடறிந்த நாவலர் இரவண சமுத்திரம் M .M . பீர் முஹம்மத் அவர்கள் கவிஞரை பார்க்கும் போதெல்லாம்,” சமுதாயக் குயிலே ! சமுதாயக் கவிஞரே ! என்றுதான் அழைப்பார் . இந்த அழைப்பே ஸனதாக (பட்டமாக) மாறிச் சமுதாயக் கவிஞர் தா.காசிம் என ஆனது.

இசை முரசு நாகூர் E .M .ஹனீபா சாஹிப் பாடிய பலப்பல பாடல்கள் கவிஞரின் கைவண்ணம் கொண்டவை தாம் ."தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு "- என்ற பாடலில் தொடங்கி தமிழகம் எங்கும் ,கடல் தாண்டியும் கவிஞரின் பாடல்கள் பரவிச் செழித்தன .

முஸ்லிம் லீக் மேடைகளில் நடந்த அனைத்து கவியரங்கங்களும் கவிஞரால்   
அலங்காரம் பெற்றன. மீலாது மேடை கவியரங்கங்களிலும் கவிஞரின் தமிழ்த் தேனாறு பொங்கிப் பிரவாகம் எடுத்தன.

No comments:

Post a Comment