Thursday, July 25, 2013

விரட்டப்பட்டவனுக்கு தெரிந்தது, விவேகி பி.ஜே க்கும் தெரிந்திருக்கிறது!




முதாயத்தை பிளவு படுத்தி சல்லடைக் கண்ணாக வடிவமைத்துக் கொண்டிருக்கும் P.J இப்போது மற்றுமொரு தளத்திற்குள் குதித்து இருக்கிறார்.

அரபு மொழியில் அவருக்குள்ள ஆகப் பெரும் விஸ்வரூபத்தை காட்டி முதலில் என்னைக் கண்டு பிரமித்துப் போய், வாய் பொத்தி என் பின்னால் வாருங்கள்"  என்ற தோற்றத்தை சரியாகத்தான் செய்து இருக்கிறார்.

குர்ஆனை தற்போது இரண்டாக பிளவு படுத்தி விட்டார். ஒலி வழி குர்ஆன் ஒன்று. எழுத்து வழி குர்ஆன் மற்றொன்று என P.J நமக்கு இரண்டு குர்ஆனை அறிமுகப்படுத்தி விட்டார்.

ஏற்கனவே பொருள் கொள்ளும் முறையில் மாறுபட்டுபொருள் வழி குர்ஆனை அஹமதியாக்கள் தூக்கித் திரிகிறார்கள். P.J க்கு, அஹமதியாக்கள் மூத்த அண்ணன்தற்போது இளைய தம்பி P.J  சிலம்பாட்டத்திற்கு வந்திருக்கிறார்.

ஜிப்ரீல்(அலை) ஒலித்து வெளிப்படுத்திய குர்ஆன் வசனங்கள் பெருமானாருக்கு அருளப் பட்டது. (ஒரு சின்ன இடைச் செருகல். ஜிப்ரீல்(அலை) எழுப்பிய ஒலிக்கு இலக்கியத் தரமான சொற்களை பெருமானார் எப்படி மொழி மாற்றம் செய்திருப்பார்கள்? பெருமானாருக்கு பேச்சு வழக்கு அரபி தான் தேரியும். P .J விற்கு தெரிந்த இலக்கிய இலக்கண அரபு பெருமானாருக்கு தெரிந்திருக்க வில்லை. அவர்கள் உம்மி என்று சிலர் சொல்கிறார்கள்.இந்த அடிப்படையிலும் யோசித்து இன்னொரு குர்ஆனையும் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது.)

எழுத்து வழிக் குர்ஆன் இப்போது நம் கைவசம் இருக்கிறது.ஆனால் இது உதுமான்(ரலி) காலத்திலே உருவாகிவிட்ட ஒன்று. இதில் மனிதப் பிழை புகுந்து விட்டது என்ற கண்டுபிடிப்புக்கு அதிகம் ஆதாரங்களை P .J  தன் அரபு ஞானக் கடலிலிருந்து அள்ளி வந்து கொட்டியிருக்கிறார்.

இந்த எழுத்து வழி குர்ஆனில் உள்ள பிழைகள் ஒலி வழிக் குர்ஆனுக்கு மாறுபட்டு, விரோதப் பொருள்களை குறிக்கின்றனவா? அப்படியானால் இதுவரை ஓதிக் கொண்டு வரும் முஸ்லிம்கள் பாவம் புரிந்த பாவிகள் ஆகிவிட்டனர்.

P .J ஒரு புது குர்ஆனை உருவாக்கத் தயாராகிவிட்டார். 

எழுத்துப் பிழைகள் நீக்கி இன்னோரு குர்ஆன் தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பு இன்னும் சில தினங்களில் P .J திருவாயிலிருந்து வெளிப்படலாம். அதைத் தொடர்ந்து வஹி கூட வந்து விடலாம்.அவருடைய தோழர்கள் (சஹாபாக்கள்) இதற்கு ஆதரவு திரட்டலாம்.இந்த அடிப்படையில் இன்னும் பல குர்ஆன்களை அடுத்தடுத்து அரபுச் சமுத்திரத்தின் அடிவாரம் சென்று முக்குளித்துக் கொண்டிருக்கும் இன்னும் பலரும் கொண்டு வர முன் வரலாம்.

வஹி ஒலி வழி இரண்டு மாதிரியாக வெளிப்பட்டது. ஒன்று வண்டின் ரீங்கார ஒலி மற்றொன்று மணியின் ஓசை. இறைவனின் கோப சாப மொழிகள் வரும்போது ஒரு வகை ஒலியும், அவனின் அருள், கருணை வரும்போது இன்னோரு வகை ஒலியும் இருந்ததாக எங்களுக்கு தெரிந்த ஆலிம்கள் சொல்லுகிறார்கள். P.J ஆலிமுக்கு இது உடன்பாடோ இல்லையோ தெரியாது.

படைத்தவன், காப்பவன், அழிப்பவன் என்று ஏற்கனவே இங்கே சிலர் மூன்று கடவுளர்களை நம்புகிறார்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவி என மூன்று நிலைகளில் கடவுளை ஏற்றுக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். இதைப் போல நாமும் ஒரு மாற்றம் செய்யலாம் என கோப அல்லாஹ், குண அல்லாஹ் என்று இரண்டு அல்லாஹ்வை நாளைக்கு கண்டுபிடித்து விடாமல் இருந்தால் சரிதான்.


சமுதாயத்தை பிளந்தாகி விட்டது.குர்ஆனை பிரித்தாகி விட்டது. வேறென்ன? அல்லாஹ்வை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டும்? அங்கும் சில கைவரிசை காட்டலாமே?

No comments:

Post a Comment