Sunday, July 14, 2013

லைலா மஜ்னு - 2

                   
                        இல்லாத இடம் இல்லை!






னல் பறக்கும் மணல் கிடக்கும் பாலைவெளி.

செக்கச் சிவந்த மேனி! உயர்ந்த வடிவம்

அந்த மனிதனின் வசீகரம்!

சுட்டெரிக்கும் சூரிய வெயிலில் ஒரு ஜொலிப்பு!

சற்று உற்றுப் பார்த்தால் பித்தக் கோலம்!

அவன் நடையில் ஏதோ ஒரு தேடல்!

அவன் விழிகளில் பூரண நம்பிக்கை.

பித்துக்குளிக்கு உள்ளும் இப்படி ஒரு ஞான முகவரி

எப்படி அடையாளப் படுகிறது?

அவன் தான் கயஸ்!          

நமது செவிப் புலன்களின் வழியே புகுந்து

சிந்தனை வெளிகளில் நடமாடித் திரியும் மஜ்னூன்!

மஜ்னூனுக்கு ஒரு சொந்தப் பெயர் இருந்து 

மறைந்து போய் விட்டது,

அந்தப் பெயர்தான் கயஸ்!

மஜ்னூன் லைலா வீட்டின் முன் இப்போது நிற்கிறான்!

அந்த இருட்டழகி தென்படவில்லை!

வீட்டு வாசலில் லைலாவின் நாய் கிடக்கிறது!

லைலாவை சந்திக்க வந்த மஜ்னூன் 

லைலாவின் நாயை உற்றுப் பார்க்கிறான்!

கட்டிப் பிடித்து 

அணை த்துக் கொள்கிறான்!        

மஜ்னூனின் பிடி தளரவில்லை!

நாயின் கடியும் முடிவடையவில்லை!

ரத்த ஒழுக்கில் மஜ்னூன்!

அந்த வழியே ஒரு பெரியவர் வருகிறார்.

இந்தக் கோரக் காட்சியைப் பார்க்கிறார்...

"அடே பைத்தியக்காரா! நாயை விடடா!

நாய் உன்னைக் கடிக்கவில்லை! 

நீதான் நாயைப் பிடித்திருக்கிறாய்!

விட்டுத் தொலைடா முட்டாளே!

இத்தனைப் பிடுங்கலுக்கு இடையிலும் 

அவரைப் பார்த்து மஜ்னூன் சிரிக்கிறான்!

"பெரியவரே! இது லைலாவின் நாய்!

லைலாவின் நாய் லைலாவின்  துணுக்கு! 

விடுவதற்கா தேடி வந்து பிடித்திருக்கிறேன்?"        
  
மஜ்னூன் மீண்டும் சிரிக்கிறான்.


அவன் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது...! 

No comments:

Post a Comment