Wednesday, February 4, 2015

எளிமை!



சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் தலைவராக இருந்த காலகட்டம் .

யூனியன் லீகின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் கேரள மாநில அமைச்சர் முஹமது கோயா சாஹிப், தொலைபேசி வழியே அப்துஸ்ஸமது சாஹிபிடம் தொடர்பு கொண்டார்.

கோயா சாஹிப் சென்னைக்கு ஏதோ பணிகாரணமாக வந்திருந்தார்.

ஃபோனில் கொஞ்சம் காரமாகத்தான் பேசினார். அப்படிப் பேசியதில் நியாயம்
இருப்பதாகத்தான் பட்டது.

சிலமாதங்களுக்கு முன்பாக நெல்லை மாவட்டத் தூத்துக்குடிக்குக் கோயா சாஹிப் கேரள அஸோஸிஷன் கூட்டத்திற்கு வந்திருக்கிறார் .

மாவட்ட லீக் சார்பாக எவரும் வரவேற்க வரவில்லை குறிப்பாக மாவட்டப் பொறுப்பாளர்கள் யாருமே வரவில்லை.

இந்த எரிச்சல் அகில இந்தியப் பொதுச் செயலர்க்கு வருதல் சரிதானே?
ஃபோனில் கோயா பொரிந்து தள்ளி விட்டார்."நெல்லை மாவட்ட லீக் செயல் படவேயில்லையா? இது பற்றி விரைவில் எனக்குத் தகவல் தாருங்கள்"எனக் கோயா வருத்தப்பட்டுக் கொண்டார்.

தலைவர் ஸமது சாஹப்,உடனேஃபோனில் பதில் சொன்னார். "மாவட்டத் தலைவர் நம் மூத்த தலைவரில் ஒருவரான சாகுல் ஹமீது
M.L.A.தான். எனவே நீஙகள் சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது."எனப் பதில் சொன்னார்.

அன்று மாலை, 8.மரைக்காயர் லெப்பைத் தெரு தலைமை நிைலயத்தில் மூன்று தலைவர்களும் சந்தித்தனர்.M.L.A.சாஹிப்(என் சிரிய தந்தையார்) சென்னையில் இருந்தார்.

கோயா கோபம் கொதித்தது. சாகுல் ஹமீது சாஹப் அதற்கு மேல் கொதித்தார். நீங்கள் இயக்கத் தலைவர்தானே? தூத்துக்குடிக்கு ஏன் வந்தீர்கள்?

மாவட்டத்திற்கு எந்தத் தகவலும் தராமல் நீங்கள் வந்து ஒரு கூட்டத்தில் கலந்து சென்றால் எங்கள் மாவட்ட லீகிற்கு என்ன மதிப்பிருக்கிறது?

மலையாளி வந்து அழைத்தால் இயக்க அமைப்பைப் புறக்கணித்து விட்டு வந்துவிடுவீர்களா? அப்படியானால் லீகிற்கு என்னதான் மதிப்பு" என M.L.A. கொட்டித் தீர்த்து விட்டார்.

கோயா குரல் தழுதழுத்து. "என் அலுவலகத்தில் இருந்து கட்சிக்குத் தகவல் இல்லையா?

"இல்லை.

அப்படியா? கோயா சாஹிப் கோபம் போன இடம் தெரிவில்லை.

சிலமாதங்கள் சென்று தமிழ் மாநில செயற்குழு இயல்பாக கூடியது.

கோயாசாஹிப் வந்திருந்தார். தூத்துக்குடி சம்பவந்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

எவ்வளவு பெருமிதத்திற்கு உரிய தலைவர் தன் கவனக் குறைவுக்கு லீக் செயற்குழுவில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

கோாயா சாஹிப் மிக எளிமையான மாக தலைவர். சென்னை தலைமையகத்திற்கு வரும் போது தெருவில் நடந்து சென்று அருகில் உள்ள கதிஜா டீக்கடையில் டீக் குடிப்பார்.  எங்களோடு பீடி புகைப்பார்.

லீக் பேரியக்கத்தில் எளிமைக்கு ஏராளம் ஏராளம் ஏராளம் எடுத்துக்காட்டுகள் கும்பல் கும்பலாகக் குவிந்து கிடக்கின்றன

No comments:

Post a Comment