டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பலதரப்பட்ட விமர்சனங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன.
சென்ற ஜனவரி மாதமே இதனைச் சரியாக விமர்சித்தவர் ஒரு அன்னிய நாட்டுப்
பிரமுகர்தான்.
அவரின் விமர்சனம் துல்லியமான உண்மையாக இன்று நிருபணமாகி இருக்கிறது.
ஆனால் அந்த அன்னியர் நம் நாட்டில்வந்து, தான் ஒரு விருந்தாளி
என்னும் நாகரிக மற்றவராக மாறி இந்த
விமர்சனத்தைச் செய்தார். அவர்தான் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா.
"நாட்டின் வளர்ச்சிக்கு மதச் சகிப்புத் தன்மை அவசியம்.மதம் இன்
ஆகியவற்றின் பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பவர்களிடம்
இருந்து நாட்டைப் பாதுகாப்பது அவசியம்" இதுதான் அந்த அடுத்த தேசத்தவர் அறிவுரை.
அவர் வந்த வேலையை லாபகரமாக முடித்துக் கொண்டு நம் நாட்டின் உண்மை
நிலவரத்தையும் மோடிக்குக் குறிப்பாகத் தெரிவித்திருக்கிறார்.
அதாவது மோடி எங்களுக்கு அவசியத்தேவை. எங்கள் சுரண்டலுக்கு விற்பனைக்கு மோடிதான் முழு முதலாள் அதனால் அவர் சரிவு சமிபித்து விடக் கூடாது. மோடி முன் வைக்கும் மறைமுக வெளிப்படை மதத் துவேசங்கள் மோடியைத் தள்ளிக் குழிபறித்து மூடிவிடும்.
மோடி இதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனும் எச்சரிக்கைதான் மேலே அவர்
சொல்லியிருக்கும் விமர்சனம் அமெரிக்க உளவு நிருவனம் டெல்லி நிலவரத்தை ஒபாமா வழியே போகிற போக்கில் கணித்துச் சொல்லி இருக்கிறது அதன்
கணிப்புச் சரியே இதனை R.S.S.தலைவர் மோகன் பகாவத் தெளிவாகப் புரிந்து கொண்டார் அதனால்தான் சில தினங்களுக்கு முன்னர் பகாவத் அறிக்கை தருகிறார்.
"இந்தியா இந்துக்கள் நாடு, இதைச் செயல்படுத்த இதுதான் தக்க தருணம்" பகாவத் முன்மொழியும் தக்க தருணம் எது?
இன்னும் கொஞ்ச நாளில் மோடி தன் தலைமைத் தனத்தைத் தக்க வைக்க அமெரிக்காவின் வழி காட்டலில் சிக்கிக் கொண்டால் பிரச்சனை நமக்குள்
முற்றிக் கொள்ளும் அதனால் R.S.S. கோட்பாட்டை அமல் படுத்த இதுதான் தக்க தருணம் எனப் பகாவத் அறிவித்திருக்கிறார்.
ஒபாமா அறிவுரை டெல்லியில் நடக்க இருப்பதின் முன்னறிவிப்பு.
பகாவத் அறிவிப்பு, அவரின்
புரிதலின் செயல்பாட்டு எச்சரிக்கை.
மோடி பதவியை விடப் போவதில்லை பகாவத் இந்துத்வ வெறியை நிறுத்தப் போவதில்லை அப்படியானால் மிக விரைவில் மோடிக்கு பழைய உபி முதல்வர் கல்யாண்சிங் நிலைமை நிகழப் போகிறதோ?
No comments:
Post a Comment