இந்திய மக்களுக்கு இயல்பாகவே தங்கள் தலைவர்களை அதிசய மனிதர்களாகப்
பார்த்துக் கொள்வதிலும் அப்படிக் கற்பனையைப் படைத்துக் கொள்வதிலும்
அதையே திரும்பத் திரும்பத் தனக்குத் தானே
வலியுறுத்திக் கொள்வதிலும் நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதிலும்
அலாதியான ஆர்வம் உண்டு.
தலைவர்களை மேம்பட்டவர்களாக மாற்ற அபூர்வக் கதையாடல்களை உருவாக்கிக் கொள்வதிலும் நாம் மகாப் பிரயத்தனம் செய்வோம்.
மேம்பட்ட நடைமுறையாளர்தாம் தலைவராக முடியும் என்பதும் நிச்சயம்.
ஆனால் அதற்காக உருவேற்றப்படும் சாத்தியக் கூறுகள் பலப்பல பொழுதுகளில்
விபரீதமாகி விடுகின்றன சில விவாதிப்போம்!
காந்தியைப் புனிதமிக்கப் பிம்பமாக்க மகாத்மா அடைமொழி அவசியப் படுகிறது.
படேலை சிறந்த நிர்வாகியாக்க இரும்புமனிதர்
என்ற முன்னொட்டுத் தேவையாகிறது.
சுபாஷ் சந்திர போஸை வலியுறுத்த நேதாஜி எனும்(மக்கள் தலைவர்) மொழியாடல் தரப்படுகிறது.
எல்லா இந்துத்துவத் தலைவர்களுக்கும் இதிகாசப் புருஷர்களின் அடையாளங்கள் வங்கப்பட்டுள்ளன.
இந்திய முஸ்லிம்களும் இந்தத் தன்மையில் இருந்து நகர்ந்து விடவில்லை.
முஹமதலி ஜின்னாவிற்கு காயிதெ ஆஜம் அடையாளமானது. முஹமது இஸ்மாயில் சாஹிபிற்கு காயிதெ மில்லத் முக்கியமானது.
முஹமதலி ஜின்னாவிற்கு காயிதெ ஆஜம் அடையாளமானது. முஹமது இஸ்மாயில் சாஹிபிற்கு காயிதெ மில்லத் முக்கியமானது.
ஜவஹர்லால் நேருவுக்கு ஆசிய ஜோதி அவசியமானது.
இந்தத் தலைவர்கள் அனைவரும் இந்த அடைமொழிகளுக்கு முழுத் தகுதியும்
பெற்றவர்களாகவும் இருக்கலாம்.
பெற்றவர்களாகவும் இருக்கலாம்.
சங்கர மடாதிபதியை மடத் தலைமையாளர் என்பதைவிடவும் மிகைப்படுத்தக் கருதி ஜகத்குரு என்னும் வலியுறுத்தல் முன்
வைக்கப்படுகிறது.
எல்லா மதத் தலைமைகளுக்கும் இது விதிவிலக்கல்ல.
தமிழகத் தலைமைகளைக் கொஞ்சம் பார்ப்போம்!
ராஜகோபாலாச்சாரியாருக்கு மூதறிஞர், முத்துராமலிங்கத் தேவருக்கு முருக
அவதாரப் பெருமை, ஈ.வே.ராமசாமியாருக்கு பெரியார், காமராஜருக்குக்
காலாகாந்தி, பெரும்தலைவர், அண்ணாதுரைக்கு பேரறிஞர்.
இவையும் போதாதென்று காஞ்சி கரிபால்டி இந்நாட்டு இங்கர்சால் வேறு
ஒட்டப்பட்டது.
ஒட்டப்பட்டது.
கருணாநிதிக்கு கலைஞர் முத்தமிழ்க் காவலர் வாழும் வள்ளுவர் தமிழ் நாட்டு முஜிபுர் ரஹ்மான் இப்படிப்பல.
நெடுஞ்செழியனுக்கு நடமாடும் பல் கலைக்கழகம் ஈ.வி.கி.சம்பத்துக்குச்
சொல்லின் செல்வர் அன்பழகனுக்கு இனமானத் தலைவர் வீரமணிக்குத்
தன்மானத் தலைவர் எம்.ஜி.ஆருக்கு புரடசித் தலைவர் இதயதெய்வம்.மக்கள் திலகம் ஜெயலலிதாவுக்குப் புரட்சிச் செல்வி இதயதெய்வம், சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம், எம்.ஆர்.ராதாவுக்கு நடிகவேள் எஸ்.எஸ். ஆருக்கு இலட்சிய நடிகர் என்.எஸ்.கே க்குக் கலைவாணர் பத்மினிக்கு நாட்டிய பேரொளி, சாவித்திரிக்கு நடிகையர் திலகம், சரோஜா தேவிக்கு அபிநய சரஸ்வதி, பாரதிக்கு மகாகவி, பாரதிதாசனுக்குப் பாவேந்தர் இப்படிப் பலப்பல ஒட்டுக்களை வாரிவாரிப் பஞ்சமின்றி அள்ளித் தெளித்திருககிறோம்.
குறிப்பாகத் திராவிடப் பாரம்பரியத்திற்கு அதனுடைய அரசியல் அடையாளமாக இந்தக் கலாச்சாரகம் தேவைப்பட்டது.
இந்தப் போதை இன்னும் விரிவடைந்தது.
அதன் வெளிப்பாடுதான் காஞ்சி கரிபால்டி இந்நாட்டு
இங்கர்சால். இப்படிச் சொன்னவர்களுக்கு கரிபால்டியையும் இங்கர்சாலையும் தெரியாதது மட்டுமல்ல அண்ணாதுரையையும்
தெரியாது போய்விட்டது என்பதுதான் உண்மை.
உண்மையில் இந்த ஒப்பீடுகளால் அண்ணாவும் அசிங்கப் படுத்தப் பட்டுள்ளார், கரிபால்டியும் இங்கர்சாலும் கேவலப்
படுத்தப் பட்டுள்ளனர். கருணாநிதியை வாழும் வள்ளுவராகவும் தமிழகத்து முஜிபுர் ரஹ்மானாகவும் ஒப்பிட்டதும் இந்த வகைப்பட்டதுதான்.
இந்த அநாவசிய முன்னுதாரணங்களை முஸ்லிம் லீகர்களும் தூக்கித் திரிவது வேதனையாக இருக்கிறது.
இதுவரை வந்துள்ள அத்தனைத் தமிழகத்து முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும்
அடைமொழிகளை அப்பி இருக்கின்றனர்.
தற்போது இதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பேராசிரியர் காதர் முஹியத்தீனை வாழும் காயிதெ மில்லத் என்ற அடைமொழியால் அலங்காரப் படுத்துகின்றனர்.
இதுவரை வந்து சென்ற தலைவர்கள் மவ்த்தான (பிரேத) காயித மில்லத்தையா தூக்கித் திரிந்தார்கள்?
இந்த இணைவைப்பு காயிதெ மில்லத்தையும் காதர்
முஹியத்தீனையும்
அருவருப்பு அடையவைத்து விட்டது.
அருவருப்பு அடையவைத்து விட்டது.
யாரும் யாரையும் காப்பி அடித்து வாழமுடியாது. வாழவும் கூடாது.
பின்பற்றி வாழலாம்.
பின்பற்றி வாழலாம்.
காதர் முஹியத்தீன் சாஹிபையும் காயிதெ மில்லத்தை அறிந்தில்லாதவர்கள் இந்த மாதிரி அடைமொழிகளைப் பரப்பி விடுகிறார்கள்.
இது ஒரு தி மு க த்தனம்.
முன்மாதிரிகளைத் தயவுசெய்து திமுக விடத்தில் கடன் வாங்காதீர்கள்.
தன் மேல்சட்டையைக் கழற்றி வைத்து விட்டு பள்ளிவாசல் பாயில் படுத்து பேராசிரியர் தூங்குகிறரர், இது எளிமையின் அடையாளமாகக் காட்டப் படுகிறது. என் போன்றவர்களுக்குத் தெரிந்த வரையில் காயிதெ மில்லத் இந்த மாதிரி எந்தப் பள்ளியிலும்
படுத்தது கிடையாது.
பேராசிரியர் கைலி சட்டை அணிந்து நடமாடுகிறார். இது எளிமை மட்டுமல்ல
தமிழகத்தின் கலாச்சாரம் கூட.
காயிதெ மில்லத் இவ்விதம் வெளி அடையாளம் காட்டியதே இல்லை.
பைஜாமா ஷெர்வானியில் வெளிப்பட்டார்கள். இந்த ஆடை வகையராக்கள் வடபுலத்து அடையாளம் மட்டுமல்ல மேல் புறத்து மக்கள் ஆடையுங்கூட.
பைஜாமா ஷெர்வானியில் வெளிப்பட்டார்கள். இந்த ஆடை வகையராக்கள் வடபுலத்து அடையாளம் மட்டுமல்ல மேல் புறத்து மக்கள் ஆடையுங்கூட.
காயிதெ மில்லத் எளிய மக்களின் பிரதிநிதியாக வாழாத மேட்டுக் குடி
பிரதிநிதிதானா?
கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் தன்
வாழ்நாளில் எந்தவொரு அரசியல்
தலைவரையும் தனிப்பட்ட முறையில் எக்காரணத்துக்காகவும் அவர்கள் இருப்பிடம் சென்று சந்தித்ததே கிடையாது.
தலைவரையும் தனிப்பட்ட முறையில் எக்காரணத்துக்காகவும் அவர்கள் இருப்பிடம் சென்று சந்தித்ததே கிடையாது.
காயிதெ மில்லத் தன்னை வெறும் அரசியல்
தலைவராக மட்டும் கருதிக் கொண்டவர்கள் அல்லர். தன்னை ஒரு சமுகத்தின் பிரதிபலிப்பாகவும் கருதினார்கள்.
தனிப்பட்ட எந்த நடவாடிக்கையும் ஒரு சமுகத்தின் நடப்பாக ஆகிவிடுவதால் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் செயல்பட்டார்கள்.
பிற அரசியல் தலைவரைத் தேவையில்லாமல் நாகரீகம் என்கிற வெற்றுத்
தனத்தில் சந்தித்தால் கூட பின்னாளில் இந்தச் சமுகமே அவரைத் தனித்துச்
சந்தித்தாகக கருதப்படலாம்.
இந்தச் சமூகத்திற்கு அது இழுக்காகும் எனும் தெளிவில் இருந்தார்கள்.
அதே நேரம் தன் இனத்தின் பெருமையினை உரிய இடத்தில் சரியான
தருணத்தில் பதிவும் செய்துள்ளார்கள்.
தருணத்தில் பதிவும் செய்துள்ளார்கள்.
தேசிய மொழித் தகுதி "என் தாய்மொழி தமிழுக்குத்தான்
உண்டு"எனப் பாராளுமன்றத்தில் காயிதெ மில்லத் மட்டுமே பதிவு செய்தார்கள்.
திமுக பொருளாளராகப்
பொறுப்பேற்ற ஸ்டாலின் இடம் நாடிச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார் பேராசிரியர்.
ஸ்டாலினை வாழ்த்தியது தனிப்பட்ட பேராசிரியராக இருந்தால் கவலையில்லை.
முஸ்லிம்லீக் செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு கருணாநிதியை
பேராசிரியர் அழைப்பார். ஆனால் காயிதெ மில்லத் ஒரு போதும்
அனுமதிக்கவே மாட்டார்கள்.
பேராசிரியர் அழைப்பார். ஆனால் காயிதெ மில்லத் ஒரு போதும்
அனுமதிக்கவே மாட்டார்கள்.
காயிதெ மில்லத் பாதை வேறு. காதர்
முஹித்தீன் வழி வேறு.
எனவே இணைத்துப் பேசவேண்டாம்.
பேராசிரியருக்கு என்னைத் தெரியும்.
அவரைத் தாக்கி இதைப் பதிவிடவில்லை என்பதை அவரே நன்கு அறிவார்,
இதுமாதிரி அடைமொழிகள் அவலமான ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டி பேராசிரியரே இந்த முறைகேட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கச் சமூதாயம்
சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment