சென்ற வாரம் டெல்லியில் இருக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்குரிய சதன்
இல்லத்தில் அம்மாநிலத்தின் எம்.பி க்களான 11 சிவசேனா
எம்.பி க்களுக்கு அம்மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்படவில்லை.
இதனைச் சகித்துக் கொள்ள முடியாத சிவசேனா அமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற
உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகள் 11 பேருக்கும் கோபம் கொப்பளித்து விட்டது.
கோபத்தின் உச்சத்தில் நின்ற மக்கள் பிரதிநிதிகள் 11 பேரும்
செயல்பாட்டில் இறங்கினர்.
இந்த உணவுகளை பரிமாறியது ஐ.ஆர்.டி.சி என்னும் நிறுவனம். இந்த
நிறுவனத்தின் மேற்பார்வையாளரை பிடித்துப், பலவந்தப்படுத்தி
அவரின் வாய் இதழைப் பிதுக்கித் திறந்து அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை அந்த
மேற்பார்வையாளரின் வாய்க்குள் திணித்து விழுங்கச் செய்ய மக்கள் பிரதிநிதிகள் 11
பேரும் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகளின் இந்த நடைமுறை வெளிப்படையான வன்முறையின் தீவிர
வடிவம்.
உயர்ந்த பதவி வகிக்கின்ற காரணத்தால் எந்த நிர்பந்தத்தையும் யார்
மீதும் திணிக்கலாம் என்ற நியாயம் இன்று முன்வைக்கப்படுகிறது.
இதில் முக்கியமான ஒரு செய்தி. அந்த உணவு நிறுவனத்தின் மேலாளர் அர்ஷத்
சுபைர் என்கின்ற முஸ்லிம். இந்த நபரும் ரமலான் மாதத்தினுடைய நோன்பை
மேற்கொண்டிருக்கக் கூடியவர்.
அந்த நோன்பை முறிக்க வன்முறை பாதையில் மக்கள் பிரதிநிதிகள் பகிரங்கமாக
முயற்சித்து இருக்கின்றனர்.
பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததற்குப் பின்னால் அந்த மக்கள் பிரதிநிதிகள்
“கொஞ்சூண்டு” சாந்தம் அடைந்து பதில் தருகிறார்கள்.
“மேற்பார்வையாளர் முஸ்லிம் என்று எங்களுக்குத் தெரியாது. அவர் சமைத்த
உணவை அவரே சாப்பிடட்டும் என்றுதான் இப்படிச் செய்தோம். இதை வைத்துக் கொண்டு
பிரதமர் மோடி அரசுக்குப் பிரச்சனைகளை உண்டு பண்ணக் கூடாது’
இது அந்த சிவசேனாகாரர்களின் பதில் மொழி.
அந்த உணவு மேலாளர் முஸ்லிமாக இல்லாமல் கூட இருக்கட்டும். அந்த நபரைப்
பிடித்து நிறுத்தி வாயைப் பிதுக்கி உணவைத் திணித்த ஒரு செயல் எவ்வளவு அற்புதமான
ஒரு நடைமுறை? அதுவும் மக்கள் பிரதிநிதிகளின் நடைமுறை பண்பாட்டு அழகு?
நாடாளுமன்றத்தில் பிரச்சனை அமளிதுமளியாகும் பொழுது அமைச்சர் வெங்கையா
நாயுடு, “இது உணர்ச்சி பூர்வமான பிரச்சனை இதனைக் கவனமாகக் கையாள வேண்டும்”
எனப் பதில் தந்திருக்கிறார்.
இதுதான் உண்மை. ஒரு உணர்ச்சிப் பூர்வத்தை உண்டாக்கி விடுவதுதான்
சிவசேனாவின் மக்கள் பிரதிநிதிகளின் ராஜதந்திரம்.
மக்கள் பிரதிநிதிகள் இப்படி ஒரு செயலை ரமலான் மாதத்தில்
தேர்ந்தெடுத்ததற்கு உள் நோக்கம் நிச்சயம் உண்டு. அதுவும் ஒரு முஸ்லிம் பணியாளரின்
வாய்க்குள் உணவைத் திணித்து அவர் மேற்கொண்டிருக்கும் நோன்பை முறிக்கச் செய்வதில்
ஒரு அர்த்த நோக்கமிருக்கிறது.
இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் பொழுது நாடாளுமன்ற அவையில்
தெற்கு டெல்லி மக்கள் பிரதிநிதியான பாஜகவைச் சார்ந்த ரமேஷ் பிதூரி தன் இருக்கையை
விட்டு எழுந்து ஆவேசமாகக் கத்தி சிவசேனா மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆதரவைத் தந்து
இருக்கிறார்.
அவை 15 நிமிடம் ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் அவை கூடுகிறது. வெங்கைய்யா
நாயுடு ரமேஷ் பிதூரியைக் கண்டிக்கிறார். அவையில் மன்னிப்புக் கேட்கச்
சொல்லுகிறார்.
ரமேஷ் பிதூரி அவையில் மன்னிப்புக் கேட்கிறார். இத்தனை
திருவிளையாடல்களும் பிரதமர் மோடியின் முன்னால்தான் அரங்கேறி இருக்கிறது.
ஆனாலும் மும்பையில் இருந்து வெளிவரும் சிவசேனாவின் அதிகார பூர்வ
நாளிதழான ‘சாம்னா’ தன் தலையங்கத்தில் இந்த எம்.பிக்களின் செயலை நியாயப்படுத்தி
இருக்கிறது. ஆதரித்து இருக்கிறது.
வெங்கைய்யா நாயுடு சொல்லி இருக்கிறாரே இந்தப் பிரச்சனை உணர்ச்சிப் பூர்வமானது என்று. இது எந்த மாதிரி உணர்ச்சியை உண்டு பண்ணும்?
இதற்கு எதிர் நடவடிக்கையாக ஆவேசம் கொண்ட சில முஸ்லிம்கள், இந்து
மதத்தைச் சார்ந்த யாரிடமாவது இப்படி ஒரு வன்முறையை நிகழ்த்தச் செய்யும் என்பதுதானே
வெங்கைய்யா நாயுடு வெளிப்படுத்தும் வார்த்தையின் பொருள்.
இதனால் ஒரு மதக் கலவரம் மகாராஷ்டிரத்தில் கொழுந்துவிட்டு எறிய
வேண்டும். டெல்லியில் அதனுடைய நிழல் பதிய வேண்டும். இந்தியா முழுவதும் இந்தக்
கோரம் எப்படியாவது விரிவடைய வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை உருவாக்கத்தானே இது
நிகழ்த்தப்படுகிறது.
இதனால் யாருக்கு லாபம்?
பாஜக தேர்தலுக்கு முன்னர் அங்கங்கே மதத் துவேஷங்களை முன்னிலைப்
படுத்தி இந்துக்களுக்கு ஆபத்து என்ற சுலோகத்தை எடுத்து வைத்து ஆட்சியமைத்து விட்ட
நிலையில் , ஆட்சி ஏறியதற்குப் பின் நாங்கள் இன்னுமொரு காங்கிரசுதான் என்ற
நிலைப்பாட்டை மறைப்பதற்காக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைதான் இந்த ராஜதந்திரம்.
இதைத்தான் உணர்ச்சிப் பூர்வமான விஷயம் என்ற மொழிகளில் பாஜக இந்தச்
செயலை வர்ணித்து இருக்கிறது.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸாலும், பாஜகவாலும்,
சிவசேனாவாலும் தயாரிக்கப்பட்ட அத்தனை மதக் கலவரங்களும் இது மாதிரி
உணர்ச்சி மயமான பிரச்சனைகளில்தான் நிறைவேறி இருக்கிறது.
இந்தியாவில் பெரும்பான்மையான குடிமக்கள் பிரதானமான இந்து தர்மத்தை
ஏற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.
எங்கேயெல்லாம் மதக் கலவரம் நிகழ்த்தப் படுகிறதோ அங்கேயெல்லாம் இந்த மத
வெறியர்கள் தங்களை மதத்தின் பிரதிநிகளாக முன்னிலைப் படுத்தி அரசியல் நடத்தும் கலை
அறிந்தவர்கள்.
ஆனால் கலவரம் நடக்கும் பகுதிகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய
இந்துப் பெருங்குடி மக்களும் முஸ்லிம் மக்களும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு
அரண்களாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.
இதை மேலும் சிதைக்க இந்தத் தீவிரவாத அரசுச் சிந்தனையாளர்கள்
முடுக்கிவிடக்கூடிய சதிச் செயல்கள்தாம் இதுமாதிரி செயல்களின் உள் நோக்கம்.
அடுத்த மதத்தின் வழிபாட்டுத் தலத்தைத் தகர்ப்பது தர்மம் என இந்துப்
பெருங்குடி மக்கள் ஒப்புக் கொள்வதே இல்லை. இது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால்
இந்துத்துவா இதைச் செய்யும்.
ஒரு இந்துவை இவர் காஃபிர் (உருவ வழிபாட்டாளர்) என்பதனால்
முஸ்லிம்களுக்கு எதிரி. இவர் தகர்க்கப் பட வேண்டியவர் என்று சொன்னால் முஸ்லிம்
பெருமக்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இது அவர்கள் தர்மமும் அல்ல.
ஆனால் ஜிஹாதிகள் செய்வார்கள்.
குஜராத்தில் ஒரு நிறைமாத முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக்
கீறி உள்ளிருக்கும் சிசுவை வெளியில் எடுத்து மண்ணெண்ணெய் இட்டுக் கொளுத்தும் கொடூரத்தை
இந்துப் பெருங்குடி மக்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இது அவர்கள்
தர்மமும் அல்ல. ஆனால் இந்துத்துவா செய்யும்.
முஸ்லிம் பெண்கள் கல்விக் கூடத்திற்குச் செல்வதற்குத் தடை இருக்கிறது.
அவர்களுக்குக் கல்வி தேவையில்லை என்று சொன்னால் எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள
மாட்டான். அது அவன் தர்மமும் அல்ல. ஆனால் அல்காயிதா அதைச் செய்யும்.
ஒரிஸாவில் ஸ்டீபன் பாதிரியார், அவர்தம்
பாலகர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டபோது எந்த ஒரு இந்துப் பெருங்குடி மக்களும் அதை
அங்கீகரித்துக் கொள்ளவில்லை. இது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால் இந்துத்துவா இதைச்
செய்யும்.
கிருத்துவ கன்னிகாஸ்திரிகள் விடுதியில் இருந்து வீதிக்கு இழுத்து
வரப்பட்டு கற்பழிக்கப்பட்டதை எந்த ஒரு இந்துப் பெருங்குடி மக்களும் ஏற்றுக்
கொள்ளவில்லை. இது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால் இந்துத்துவாகாரர்கள் இதைச்
செய்வார்கள்.
ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு பிரசவத்தை நடத்தத் தவிர்க்க முடியாத நிலையில்,
ஒரு ஆண் மருத்துவர் மருத்துவம் செய்ய நேரிட்டால் அதை ஏற்றுக் கொள்ள
முடியாது அதனால் அந்தப் பெண் இறந்தாலும் தவறில்லை என்பதை முஸ்லிம் பெருமக்கள்
ஒருகாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால் அல்காயிதா
இதைச் செய்யும்.
பிரச்சனை என்னெவென்றால் இந்துத்துவாவிற்கும் ஜிஹாதிகளுக்கும் இடையிலே
நடைபெறுகிற அரசியல் வன்முறைகள் முழுக்க அரசியல் நோக்கம் கொண்டவை. எனினும்
பாதிப்புக்கள் இந்து மக்களுக்கும் , முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பரிமாறப்படுகின்றன.
இதைப் புரிந்துக் கொண்டு இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தப் பயங்கர கொடிய
வன்முறையாளர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப் படுத்த வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ், பாஜக, சிவசேனா போன்ற இந்த பயங்கரவாதத் தீவிரவாத அமைப்புகளின் “இந்துத்துவா”
என்பது இந்து இஸம் அல்ல. இந்து தத்துவம் அல்ல.
இதேபோல் இஸ்லாம் என்ற பெயரை அரசியல் படுத்தி செயலில் இறங்கும்
தீவிரவாத ஜிஹாதிகள் போன்ற அமைப்புகளும் வைக்கும் இஸ்லாமிய கோட்பாடு இஸ்லாத்தின்
தர்மமும் அல்ல. இஸ்லாமிய இஸமும் அல்ல.
இதை இந்துப் பெருங்குடி மக்களும் புரிந்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய
மக்களும் அறிந்துக் கொள்ள வேன்டும்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவா இந்திய மண் சார்ந்த சிந்தனை அல்ல.
உலகத்தின் மூத்த மதங்களில் ஒன்றான யூத மதத்தின் கோட்பாடுகளை இந்திய தர்மம் போல
இந்துத்துவா முலாம் பூசி வழங்கப் படுகிறது.
ஜுலை 20 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை ‘தி இந்து’
தமிழ் நாளிதழில் ராமச்சந்திர குஹா எழுதியுள்ள ஒரு செய்தி நினைவு
கூரத்தக்கது.
“இந்துத்துவா தனித்தன்மை உள்ளதா? யூதர்களும்
இதையேதான் கூறி வந்தனர். உலகிற்கே வழி காட்டக் கூடியவர்கள் நாங்கள்தான் என்றும்
கடவுளுடன் தங்களுக்கே நெருக்கமான உறவு இருப்பதாகவும் கூறினர்.
இரு தரப்பினரிடையும் சிறிய வித்தியாசம் இருக்கிறது.
யூதர்கள் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் என்று கருதுவது பரப்பில்
மிகச் சிறியது.
இந்துத்துவா ஆதரவாளர்கள் அடைய விரும்பும் அகண்ட பாரதமோ அளவில்
பெரியது.”
இந்தக் கருத்து ஆழமாக சிந்திக்கப் பட வேண்டிய ஒன்று. யூதர்கள்
எப்பொழுதுமே தங்களைப் புனிதமானவர்களாக நம்பக் கூடியவர்கள். யூதராக பிறக்கத்தான்
முடியும் எவரொருவரும் யூதராக ஆக முடியாது.
ஏனென்றால் அவர்கள்தாம் ஆண்டவனுக்கு அணுக்கமானவர்கள் என்று அறிவித்துக்
கொள்ளக் கூடியவர்கள்.
ஒரு குழந்தை குழந்தையாகத்தான் பிறக்கிறது. அது வளர்ப்பில்
பெற்றோர்களாலும் சார்ந்துள்ள சமூகத்தவர்களாலும் முஸ்லிமாகவோ , கிருத்துவராகவோ,
யூதராகவோ, சமணராகவோ,புத்தராகவோ வேறு எந்த மதத்தினராகவோ ஆக்கப் படுகிறது. அல்லது அந்தக்
குழந்தை வளர்ந்து பெரியவனாகி தன் சொந்தச் சிந்தனை அடிப்படையில் ஏதாவது ஒரு
மதத்தைத் தேர்ந்தெடுத்து தன்னை மதம் மாற்றிக் கொள்கிறது என்ற இயற்கை விதிக்கு
முரணான கோட்பாட்டை யூத மதம்தான் உலகில் முதன்முதல் முன்வைத்தது.
ஒரு குழந்தை மதமாகத்தான், சாதியாகத்தான் பிறக்கிறது. தன் நிலையை எந்த
நிலையிலும் மாற்றிக் கொள்ள அல்லது மாறிக் கொள்ள அந்தக் குழந்தைக்கு உரிமையே
கிடையாது. அதாவது அந்தந்த மதத்தில் அந்த சாதியில்தான் பிறக்க முடியும் என்ற
தத்துவத்தை முன் வைத்து மனிதன் மத மனிதனாகத்தான் பிறக்கிறான். அதை அவன் மீறிக்
கொள்ள கூடாது. முடியாது என்ற வினோதக் கோட்பாடுதான் யூதக் கோட்பாடு.
யூதர்கள் வரலாற்று ரீதியாக இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருந்தவர்கள்.
யூதர்கள் வரலாற்று ரீதியாக இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருந்தவர்கள்.
சிந்து சமவெளி வழியே இந்தியத்திற்குள் புகுந்த யூதர்கள் தாங்கள் பெற்ற
அனுபவ அடிப்படையில் தங்கள் புனிதமும் கெட்டு விடாமல் தங்கள் வர்க்கத்திற்குக் கீழே
இன்னும் சில வர்க்கங்களை உருவாக்கி அவர்க்ளுக்குள்ளும் புனிதங்களைப் புகுத்தி தன்
கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தனர். அப்படி ஒரு
பெரும்பான்மையைத் தத்துவமாக்கி இந்தியத்தில் இருந்த பல வணக்க வழிபாட்டு சமயத்தினரை
தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரக் கற்றுக் கொண்டார்கள்.
பிராமணராக ஒருவர் ஆக முடியாது. பிராமணராக பிறக்கத்தான் முடியும்.
இந்தக் கோட்பாடு அவர்களுடைய பூர்விக யூத மதத்தின் சாஸ்திர பிடிப்பு. இவர்கள்தான்
ஆண்டவனுக்கு அணுக்கமானவர்கள்.
இதே போல இங்கு வாழ்ந்து கொண்டிருந்த பலதரப்பட்ட சமயத்தினருக்கும்
புனிதத்தைக் கற்றுத் தந்து தங்கள் கைவசம் வைத்துக் கொண்டனர்.
முதலியார்கள் முதலியார்களாகத்தான் பிறக்க முடியும். இதே போல்
பிள்ளைமார், பறையர், செட்டிமார், பள்ளர் அவரவர் சமயத்தில்தான் பிறக்க முடியும். எவரும் எந்த
சமயத்தையும் ஏற்று அந்தச் சமயத்தில் இணைந்து கொள்ள முடியாது என்ற யூத தத்துவத்தை
நிலைப் படுத்தி வைத்தார்க்ள்.
இந்த யூத தத்துவத்தை இந்துத்துவா என்ற போர்வைக்குள் மூடி மறைக்க எத்தனிக்கிறார்கள்..
இந்த யூத தத்துவத்தை இந்துத்துவா என்ற போர்வைக்குள் மூடி மறைக்க எத்தனிக்கிறார்கள்..
லக்னோ இந்து மகா சபையின் தலைவராக 1940 களில்
இருந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த தீர்த்தர் “தடைகல்”
என்று அவர் எழுதிய புத்தகத்தில் இந்து தர்மத்தைத் தேடுகிறேன் என்று
குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுதான் உண்மை. இந்துத்துவாவில் இந்து தர்மம் இல்லை.
இன்றையப் பெண்ணியவாதிகள் தாங்கள் அடிமைகளாக ஆக்கப் பட்டதற்கு
முழுமையான வரலாற்றுக் காரணம், தங்களிடமிருந்து மாதாந்திரம் வெளிப்படும் தீட்டை வெளிப்படுத்தி அதைக்
கொச்சையாக்கி இந்தத் தீட்டுக்குடையவர்கள் பிரம்மஹத்தி சாபம் பெற்றவர்கள் என்று
கூறி ஆணாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டார்கள் என்ற செய்தியை முன்வைக்கிறார்கள்.
இந்தத் தத்துவம் கூட யூத தத்துவம்தான்.
ஏவாள் சாத்தனுடையப் பேச்சை நம்பி செய்த தவறால்தான் மானுடப் பாவம்
பிடித்துக்கொண்டது. அந்த மானிடப் பாவம் பெண்களுக்கு மாதந்தோறும் வெளிப்படும்
அசுத்தத்தின் அடையாளம். இதைத்தான் இங்கே பிராமண தர்மம் பெண்களைப் பிரம்மஹத்தி
சாபம் என்று குறிப்பிட்டது.
சமீப காலம்வரை கூட யூதப் பெண்கள் பிரசவ காலத்து வேதனையை முழுவதுமாக
அனுபவிக்க வேண்டும். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளிக் கொண்டுவரக் கூடாது.
பெண்களின் முதல் மனுஷி ஏவாளின் பாவத்துக்குக் கிடைத்த தண்டனை இது என்ற கொடூரமான
கோட்பாட்டை யூதர்கள் கடைபிடித்துக் கொண்டிருந்தார்கள். இதை கிருத்துவத்திலும்
அவர்கள் புகுத்தி வைத்து இருந்தார்கள்.
பெண் பிறப்பு மரணத்திற்கு பின் சொர்க்கத்தையும் அடைய முடியாது. அவள்
மறுபிறப்பு பல எடுத்து ஆணாகப் பிறந்து மரணிக்க வேண்டும்.
சொர்க்கத்திற்குச் செல்ல யாராக இருந்தாலும் பிராமண பிறப்பெடுத்து
மரணித்தால்தான் முடியும் என்ற கோட்பாடெல்லாம் யூதப் புனிதத்தின் நீட்சி ஆகும்.
எந்த ஒரு இந்தியக் குணம் சார்ந்த இந்துப் பெருமக்களும் வன்முறையில்
நம்பிக்கைக் கொண்டவர்கள் அல்லர்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவா, யூத
தத்துவத்தின் பூரண வடிவம். இதனை இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான சகோதர இந்து
சமயத்தினர்கள் தெளிவாகப் புரிதுக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்.
சுருக்கமாக இந்துத்துவா என்ற வெறித்தனமும் , ஜிஹாதி
என்ற கொடுந்தனமும் இந்திய மக்களின் குணப்பாடே அல்ல.
உணர்ச்சி வசப்படாமல் உண்மையினை உள்வாங்க வேன்டிய கால கட்டம் நம்
அனைவருக்கும் உரியதாகும்.
No comments:
Post a Comment