சொர்க்கத்திற்குச் செல்ல யாராக இருந்தாலும் பிராமண பிறப்பெடுத்து
மரணித்தால்தான் முடியும் ....<<<<
நாரையும், தவளையும் முக்தி பெற்றதாக எம் மத நூல் சொல்கிறது. ‘அஹம்’
அழிந்தால் முக்தி. இதை எழுதியவருக்கு ஹிந்து மதம் பிடிக்காததாக
இருக்கலாம். அதற்காகக் கருத்துகளைத் திரிப்பது தவறு. ஹிந்துக்கள் என்ன எழுதினாலும்
பொறுத்துக்கொள்வர் எனும் துணிச்சலே எதை வேண்டுமானலும் எழுதத் தூண்டுகிறது. ஹதீஸ் /
குர் ஆன் வசனங்களை இவ்வாறு எழுத முடியுமா ?
இனிய நண்பர் தேவ்ராஜுக்கு,
மிக நேயத்தோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்
வார்த்தையில் நிச்சயம் நம்பிக்கை வையுங்கள்.
நான் எந்த மதத்திற்கும் துவேஷி அல்லன். அதே போல் எந்த மதத்திற்கும்
பிரச்சாரகரனும் அல்லன்.
இங்கு வரலாற்றில் மதத்தின் பெயரால் திணிக்கப்பட்டு வரும் தகவல்களில்
சிலதைப் பதிவு செய்து இருக்கிறேன். நான் வரலாற்றுக் கருத்துக்களைத் திரித்துப்
பதிவு செய்யவில்லை.
மனுதர்மம் சொல்லி இருப்பதைத்தான் பதிவு செய்தேன். சொர்க்கம் பற்றி
என்னுடைய பதிவு திரித்துச் சொன்ன பதிவு அல்ல.
ஆனால் சொர்க்கம் பற்றிய இந்தக் கருத்து யூத மதத்தின் கொள்கை நீட்சி
என்ற வரலாற்றுத் தகவலைத்தான் தந்திருக்கிறேன். இது இந்து மதத்தை தாக்கும்
கருத்தாகத் தயவு செய்து எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மிக முதிர்ந்த வேத விற்பனர்
அவர் குறிப்பிட்டு இருக்கக்கூடிய கருத்தும் சொர்க்கம் பற்றிய இந்தப் பதிவை
முன்வைத்து இருக்கிறது.
கூடுதலாகவும் ஒரு தகவல். ஸ்ரீபாஷ்யத்தின் அபசூத்ராதிஹரணம் என்ற
பகுதியில் ராமானுஜர் தரும் விளக்கத்தைத் தாத்தாச்சாரியார் எழுதி இருக்கும்
வடிவத்தைக் கீழே தருகிறேன்.
“பகவானின் உருவத்தை நித்தியமும் தியானித்து உபாசனம்
செய்பவர்களுக்குத்தான் மோட்சம். நான் சொல்வது இப்பிராமணர்களுக்கு மட்டும்தான்.
பிராமணர் அல்லாத சூத்திரர்கள் மோட்சம் வேண்டுமென்றால் இந்தப் பிறவியை இப்படியே
கழித்து’ அடுத்த ஜென்மாவில் பிராமணனாகப் பிறக்க பகவானைப் பிரார்த்திக்க
வேண்டும். ஒருவேளை அடுத்த பிறவியில் பிராமணர்களாகப் பிறக்க அவர்களுக்குப்
பிராப்தம் கிடைத்தால் பகவானைத் தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.
அது போலவே பிராமண ஸ்திரீகளும் சூத்திரர்கள்தாம். எனவே அவர்கள் அடுத்த
ஜென்மாவில் பிராமணப் புருஷனாக அவதரித்தால்தான் மோட்சத்திற்குப் பாடுபடுதற்குரிய
தகுதியே கிடைக்கும்.” இது ராமானுஜரின் பாஷ்ய விளக்கம்.
இது போன்ற தகவல்கள் பற்றி நான் மதரீதியாக விமர்சிக்க விரும்பவே இல்லை.
இந்திய எல்லைக்குட்பட்ட சமயத்தவர்களின் கருத்து இதுவாக வரலாற்று ரீதியாகவும்
இல்லை. யூதர்களின் கோட்பாட்டில் நீட்சியாக வடிவம் பெற்று இங்கே புகுத்தப்பட்டு
இருக்கிறது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. நாரையும்
தவளையும் சொர்க்கம் சென்ற கதையை நீங்கள் பதிவு செய்து இருக்கிறீர்கள். அதனோடு
யானையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவைகள் எல்லாம் சொர்க்கம் செல்ல முடியும்.
ஏனென்றால் இவைகளுக்குப் பாவபுண்ணிய பிடிமானம் கிடையாதாம்.
மனிதப் பிறவிக்குத்தான் பிரச்சினையே. இந்தக் கருத்தும் யூதக்
கருத்தின் நீட்சிதான்.
நண்பர் தயவு செய்து மீண்டும் கவனமாகப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய பதிவு இந்து மதத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு உணர்ச்சியே அல்ல.
உங்களுக்கு என்னைப் பற்றி இப்படி ஒரு கருத்து தோன்றுவதற்கு ஒரு காரணம்
இருக்கிறது. என் பெயர் ஹிலால் முஸ்தபாவாக இருப்பதால் நான் இந்து மத வெறுப்பாளன்
என்று கருதிவிட்டீர்கள். தயவு செய்து உங்கள் கருத்தைத் திருத்தம் செய்துக்
கொள்ளுங்கள்.
குர்ஆனை, ஹதீஸை விமர்சிக்க முடியுமா? என்று
கேட்டு இருக்கிறீர்கள். முஸ்லிம்களாக இருக்கும் பல குழுவினர் ஹதீஸைக் கடுமையாக
விமர்சித்து கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஹதீஸை
ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று சொல்லும் கூட்டத்தினரும் முஸ்லிம்களில்
இருக்கின்றனர்.
அதேபோல குர்ஆனுக்கும் ஏராளமான விளக்கவுரைகளை அவரவர் கோணத்தில்
விமர்சித்து கொண்டு இருக்கிறார்கள். இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால்
இவைகளைப் பற்றி தகவல் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் என்பதனால் சொல்லிக்
காட்டுகிறேன்.
என்னுடைய நோக்கம், என்னுடைய இந்தப் பதிவில் மத பிரச்சனைகளை விவாத்தித்துக் கொண்டிருப்பது
அல்ல. மதப் பிரச்சனைகள் எப்படி அரசியலாக்கப்பட்டு மக்களுக்கு இடையில்
குழப்பங்களையும், குதர்க்கங்களையும், கொலைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்ற கோணத்தில்தான் நான்
என் கருத்தைப் பதிவு செய்து இருக்கிறேன்.
ஹதீஸும், குர்ஆனும் தமிழாக்கம் பெற்று இருக்கின்றன. நீங்களும் கூட அவற்றை
ஆழமாகப் படித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்வீர்களேயானால் அதைத் தடுக்க
எவருக்கும் உரிமை கிடையாது.
அவற்றைப் பற்றி விவாதிக்க சம்மந்தப் பட்டவர்கள் உங்களோடு தங்கள் கருத்தைப்
பதிவு செய்து கொள்வார்கள். வேதம் என்பது மனிதர்களுக்குத்தான் செய்தி சொல்கிறது.
அது ஒரு சாதியினருக்கோ மதத்தினருக்கோ அல்ல. அதை ஏற்றுக் கொள்வதும் மறுத்துக்
கொள்வதும் மனிதர்களின் தனிப்பட்ட உரிமை.
இது உங்களுக்குப் புரிய வைக்கிற என்னுடைய தன்னிலை விளக்கம். நன்றி!.
ஹிலால் ஸாஹேப், ஸலாம். ‘அபசூத்ராதிகரணம்’ சரியான பெயர்; அபசூத்ராதிஹரணம்’ இல்லை. அதன் பொருள் வேறு. திரு
தாதாசார்யரின் கருத்துகளுக்கு மறுமொழி கூறப்பட்டு விட்டது. அவர் அதை வெளியிடவில்லை, அவருக்கு பப்ளிசிடி முக்கியம் என்பதால். அப்பெரியவர் சார்ந்த மரபில் உள்ளோர் வழிபடும் ஆழ்வார்களில் பலர் அந்தணர் அல்லாதவரே. ஆதி சங்கரர் ஆன்ம ஞானியான சண்டாளனை வணங்கி ‘மநீஷா பஞ்சகம்’ பாடினார். பிராமணர் தவிரப்
பிறருக்கு முக்தி இல்லை என எங்கும் சொல்லப்படவில்லை; பிராமணராய்ப்
பிறந்தால் முக்தி கிடைத்துவிடும் என்றும் எங்கும் யாரும்
சொல்லவில்லை. மேல் வகுப்பினர் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவில்லை
என்றால் தண்டனையும் அதிகம் என்றே நூல்கள் சொல்கின்றன.
ஹிந்து சமயம் என்றால் யார்
வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசலாம் என்றாகிவிட்டது. ஏனென்றால் இங்கு ‘ஃபத்வா’ கிடையாது :))
ஸ்ரீமத் தேவ் ராஜ் நமஸ்கார்,
“ஹிலால் ஸாஹேப் (ஸாஹேப் அல்ல ஸாஹிப்) ஸலாம்” என்று
நீங்கள் என்னைக் குறிப்பிட்டிருப்பதில் உள்ள கருத்தை நான் புரிந்து கொள்கிறேன்.
ஒரு பகுதிக்குள் என்னை நீங்களே பிடித்துத் தள்ளிவிட்ட மகிழ்ச்சி தெரிகிறது.
நான் இப்படிப் புரிந்து கொள்கிறேன். ஹிலால் என்றால் மூன்றாம் பிறை.
ஸாஹிப் என்றால் தோழர். ஸலாம் என்றால் சாந்தம். இளம்பிறைத் தோழருக்கு சாந்தம்
உண்டாகட்டும் என்ற முகமனுக்கு நன்றி!
அபசூத்ராதிகரணம் என்ற வார்த்தையில் தமிழ் கரணம் அல்ல. ஸமஸ்கிருத ஹரணம்
என்பதே சரி என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நிச்சயமாக திருத்திக் கொள்கிறேன்.
இதன் பொருள் வேறு என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அந்தப்
பொருளையும் விவரித்து இருந்தால் எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கலாம்.
தாத்தாச்சாரியாருக்கு மறுப்பு கூறப்பட்டு விட்டது. அவர் அதை
வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவர் வெளியிடவில்லையென்றால்
என்ன? நீங்கள் வெளியிட்டு இருந்தால் அது பற்றியும் நல்ல விவாதப் பொருளாகி
இருக்குமே.
“ஆதி சங்கரர் ஆன்ம ஞானியான சண்டாளனை வணங்கி மநீஷா பஞ்சகம் பாடினார்”.
நல்ல தகவல் தந்தீர்கள்.
சிவனல்லவா சண்டாளன் வேடம் தரித்து வந்தார் என்று சொல்லப்
பட்டிருப்பதைப் படித்திருக்கிறேன். அதெல்லாம் சரி. சண்டாளனுக்கு அர்த்தம்
சொல்லுங்கள். யார் யார் சண்டாளர்கள்?
பிராமணராய்ப் பிறந்தால்தான் முக்தி கிடைக்கும் என்று யாரும்
சொல்லவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நிறைய சொல்லப் பட்டிருப்பதாகப் பல
நூல்கள் சொல்லுகின்றன. ஆனால் இதைப் பற்றி வாதப் பிரதிவாதம் நடத்துவது தர்மத்துக்கு
நல்லதல்ல. இதை உங்களுக்குள்தான் நீங்கள் பேசிக் கொள்ள வேண்டும்.
மேல்வகுப்பார் தப்புச் செய்தால் அதாவது கடமையைச் செவ்வனே
செய்யவில்லையென்றால் தண்டனை அதிகம் என்றே நூல்கள் சொல்கின்றன எனக் குறிப்பிட்டு
இருக்கிறீர்கள். இது சத்தியமான வார்த்தை.
சூத்திரர்கள் பெறக்கூடிய தண்டனைகள், பெண்கள்
பெறக்கூடிய தண்டனைகள் பற்றி கொஞ்சம் விளக்கி இருந்தால் பலரும் தவறாகப்
புரிந்திருப்பதை மாற்றிக் கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்குமே.
ஹிந்து சமயம் என்றால் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசி
விடலாம் என்றாகிவிட்டது ஏனென்றால் இங்கு பத்வா கிடையாது என்று குறிப்பிட்டு
பக்கத்தில் ஒரு சிரிப்பான் குறியீடை பதிவு செய்து இருக்கிறீர்கள்.
இதுவரைக்கும் நீங்கள்
தந்திருக்கும் விளக்கத்துக்கு சிரிப்பானைத்தான் அர்த்தம் கொள்வதா?
பத்வா என்றால் சட்டவிதி என்று பொருள். சட்டவிதி என்று சொல்லி முஸ்லிம்
என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட அவரவர்களும் தங்கள் தங்களுக்குரிய சட்டவிதிகளைச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதேபோலதான் இந்து தர்ம பத்வாக்களும் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.
பெங்களூரில் பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று ஒரு பப்பின் உள் நுழைந்து
அங்கிருந்த பெண்களை ‘இது இந்திய கலாச்சாரத்துக்கு விரோதமானது’ என்ற ஒரு
பத்வா அடிப்படையில் அடித்து நொறுக்கியதும், அடுத்து
வரும் காதலர் தினத்தில் அதைக் கொண்டாடக் கூடியவர்களைக் கண்டால் உங்களுக்குள்
நாங்கள் திருமணம் நடத்தி வைப்போம் என்ற பத்வாவின் அடிப்படையில் மிரட்டினார்கள்.
மும்பையிலும் இதே பத்வா கடைபிடிக்கப்பட்டது. அயோத்தி வணக்கத்
தலத்திலும் இதே பத்வா கடைபிடிக்கப் பட்டு அந்தப் பள்ளி தரைமட்டமாகி இருக்கிறது.
முஸ்லிம் ஆனாலும் சரி, இந்துவானாலும் சரி. பத்வா என்ற பெயரில் சில
வன்முறையாளர்கள் தங்கள் கோட்பாடுகளைத் திணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நடைமுறை படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுமாதிரி பத்வாக்கள் நகைப்புக்குரியதல்ல. கண்டனத்திற்குரியது என்பதுதான்
சரியானதாக இருக்க முடியும். இந்து,
முஸ்லிம் என்ற அடிப்படையில் விவாதிப்பதை புறமொதுக்கிவிட்டு மனிதன்
என்ற அடிப்படையில் இனிமேல் விவாதிப்போமே?
ஐயா நன்றி!
நன்றி ஐயா. கண்டனப் புத்தகங்களை வெளியிடலாம்தான். எமக்கு
வெளிநாடுகளிலிருந்து யாரும் பணம் அனுப்புவதில்லையே :))
>>>> “ஹிலால் ஸாஹேப் (ஸாஹேப் அல்ல ஸாஹிப் <<<
ஸாஹேப் [साहेब] என்பதுதான்
சரி. ஸாஹிப் அன்று.
>>>> ஸ்ரீமத் தேவ் ராஜ் நமஸ்கார்,<<<<
‘ஸ்ரீமான்’ எனும் விளிப்பு சரியானது. ‘ஸ்ரீமத்’ தவறு.
இஸ்லாமை விமர்சித்து சல்மான் ருஷ்டியும், வங்க
தேசப் பெண்பால் எழுத்தாளரும் உயிருக்கஞ்சி வாழ்வது உலகறிந்ததே.
இன்னும் அந்த மதத்திலிருந்து வெளிவந்தோர் சொல்லும்
விமர்சனங்களும் வேண்டிய அளவு இணையத்தில் பதிவாகியுள்ளன.
சரியான புகலின்றிப் பாலஸ்தீனியர் தவிப்பதும் உலகறிந்ததே
Palestinians who live in Israel, including Jerusalem,
appreciate Israel's economic success, social services, and other benefits.
Salaries in Israel are about five times higher than in the West Bank and Gaza
Strip and Israel's social security system has no parallel on the Palestinian
side.
www.danielpipes.org
For all their rhetoric about Israel's "vicious"
and "brutal" occupation, Palestinian Arabs - including their leaders
- sometimes let down their guard and acknowledge how they prefer Israel to the
Palestinian Authority. Here are some recurring themes:
>>>அபசூத்ராதிகரணம் என்ற வார்த்தையில் தமிழ் கரணம் அல்ல. ஸமஸ்கிருத ஹரணம்
என்பதே சரி என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நிச்சயமாக திருத்திக் கொள்கிறேன்
<<<<
மீண்டும் சொல்கிறேன் - ‘அபசூத்ராதிகரணம்’ சரியான
வடிவம். ‘ஹரணம்’ என வராது. அதிகரணம்,
அதிகாரம், அத்யாயம் - பகுப்புக்கான சங்கதச் சொற்கள்.
அபசூத்ராதிகரணம் எப்படியோ போகட்டும். தற்போது
உலகம் ‘ஜிஹாத்’ செயல்பாடுகளைத் தான் கவனித்து வருகிறது என்பதை உங்கள் மேலான கவனத்துக்குக் கொணர்கிறேன் - http://www.jihadwatch.org/why-jihad-watch
www.jihadwatch.org
ஸ்ரீமத் தேவ் ராஜ் அவர்களுக்கு நமஸ்கார்,
ஸ்ரீமத் என்று சொல்லுவது குற்றமல்ல. ஸ்ரீமான் என்று சொல்லுவது
தப்புமல்ல.
சாஹேப் – இந்தி மொழிப் பாணியில் சரியாக இருக்கலாம். உருதுவும் இப்படித்தான்
சொல்கிறது. ஆனால் ஸஹாப் (தோழர்) என்ற அரபுச் சொல்தான் மூலச் சொல். அந்தச் சொல்
அடிப்படையில் ஸாஹிப்தான் சரியான வார்த்தை.
நான் ஒரு தரவை Facebook இல் பொதுப் பார்வைக்குப் பதிவு
செய்திருந்தேன். அதை அன்புத் தோழர் ரத்னவேல் மீள் பதிவு செய்திருந்தார். அந்த
மீள்பதிவில் உங்கள் கருத்தைப் பதிவு செய்தீர்கள். அதற்கு என் கருத்தைப் பதிவு
செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. நானும் பதிவு செய்தேன்.
அதற்குப் பின் பொதுப் பதிவில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டு
எனக்குக் கடிதத்தில் பதில் தந்தீர்கள். நானும் இந்தப் பிரச்சனையை நமக்குள் பேசிக்
கொள்ள நீங்கள் ஆசைப் படுகிறீர்கள் எனக் கருதினேன். நானும் கடிதம் பதிவு செய்தேன்.
மீண்டும் உங்கள் கடிதம் அதற்கு இப்பொழுது என்னுடைய கடிதம்.
இந்தப் பிரச்சனையைப் பொதுப் பதிவில் நாம் பதிவு செய்திருந்தால்,
உங்கள் சார்பான சிந்தனைகளும் அதிகம் பதிவாகி இருக்கும் என்னுடைய
கருத்துகளுக்கும் ஆதரவு கிடைத்திருக்கும்.
பிரச்சனையைப் பொறுத்தளவில் நீங்கள் ஒரு முன்திட்டத்தோடு
அணுகுகிறீர்கள். என்னைப் பொறுத்தளவில் எந்த முன்திட்டத்தையும் நான் வைப்பதில்லை.
பிரச்சனையை அதன் போக்கிலேயே பார்ப்பேன். நமக்கு மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும்
கடிதச் செய்திகள் இதனால் திசை மாறிப் போய்விட்டது.
வங்கத்து எழுத்தாளர் தஸ்லீமா பட்ட அவஸ்தை, சல்மான்
ருஷ்டி சந்திக்கும் பிரச்சனை மட்டுமல்ல இங்கே நடந்து கொண்டிருப்பது. மகத்தான
ஓவியர் உசேன் பட்டுக் கொண்டிருந்தக் கொடூரமும் உலகத்துக்கு தெரியும். மதங்கள்
மதமதப்பில் இதைத்தான் செய்யும். பாலஸ்தீனத்தைத்
தூக்கிக் கொண்டீர்கள். இஸ்ரேலுக்கு ஆதரவு தருகிறீர்கள். அது உங்கள் நிலைப்பாடு. உலகம் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். உலகம் ஜிஹாதிகளை மட்டுமா கண்டு
கொண்டிருக்கிறது? ராஜபக்சேவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஒபாமாவைக்
கண்டு கொண்டிருக்கிறது. இஸ்ரேலையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது அரசியல்
வன்முறையாளர்கள் எந்த வடிவத்தை எடுத்தாலும் இப்படித்தான் இருப்பார்கள்.
தாத்தாச்சாரியாருக்கு கண்டனத்தைத் தெரிவிக்க நூல் ஒன்றை வெளியிட
வெளிநாட்டு பணம் வந்தால்தான் முடியும் என்ற கருத்து ரொம்பவும் வேடிக்கையானது.
இந்து தர்மம் என்ற பெயரில் எத்தனையோ கண்டன நூற்களும், கண்டன
கட்அவுட்களும், கண்டனப் போஸ்டர்களும் , கண்டன நோட்டீஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன.
வெளிநாட்டு பணம் இவர்களுக்கு வந்ததனால்தான் இவைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவா?
ஜூலை 8லிருந்து 14ஆம் தேதி வரை இந்து ஆன்மீக கண்காட்சி திருவான்மியூரில் நடைபெற்றது.
மிக அற்புதமாக அமைத்திருந்தார்கள். இதுபற்றி கருத்து முரண்களும் இருக்கலாம்.
அதுபற்றி கவலை இல்லை. ஆனால் அமைப்பாளர்கள் நன்றாகவே அமைத்திருந்தனர். குறிப்பாக
ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் முன்னின்று நடத்திய செயல்பாடு சிறப்பாக
இருந்தது.
பிரச்சாரப் பலம் லட்சங்களை அல்ல கோடிகளையே தொட்டு இருந்தது. நீங்கள்
அன்னிய பணத்தில் அவர்கள் இதைச் செய்தார்கள் என குற்றம் சாட்டுகிறீர்களா? கண்காட்சியில்
ஸ்டால் போட்டு இருந்தவர்களுக்கு ஒரு ஸ்டாலுக்கு இருவருக்கு மூன்று வேளை உணவும்
இலவசமாக வழங்கப் பட்டது. இதுவும் வரவேற்கத்தக்க ஒன்று. இந்தச் செலவினங்களையும்
அன்னிய நாட்டுப் பணம் வந்துதான் செய்து முடித்ததா? இந்தக்
கண்காட்சியில் எனது இனிய நண்பர்கள் ஸ்டால் போட்டு இருந்தார்கள். நானும் அவர்களோடு
அங்கிருந்து இதை நேரடியாக ரசித்தவன். அதனால் சொல்லுகிறேன். இப்படியெல்லாம் குற்றம்
சாட்டுவது போல உங்களுடைய மொழிப் பிரயோகம் இருக்க வேண்டாம் என கருதுகிறேன்.
சரி, எல்லாம் போகட்டும். நாம்
எடுத்துக் கொண்ட விவாதத்திற்கு உங்களிடம் போதிய தரவுகள், விவரங்கள்
இல்லை. அதனால் வெறும் குதர்க்கங்களாகவும், தர்க்கங்களாகவும்
தலை தப்பிப் போகிறது. இது நேர விரயம். ஒரு நேர விரயத்தை நமக்குள் நாமே தனியே
யாருக்கும் தெரியாமல் நிகழ்த்தி கொண்டிருப்பது மகத்தான அநாகரீகம். ஆகவே ஸ்ரீமத்
அவர்களே நேரத்தை விரயமாக்காமல் நாம் விவாதங்களை முடித்துக் கொள்வோம்.
ஸ்ரீமத் அவர்களே! நன்றி. சுபம்
No comments:
Post a Comment