Sunday, July 17, 2016

பொல்லாத பூர்வீகம். . . ! ( 3 )



பாரதீய ஜனதா கட்சி, ஏராளமான நாக்குகளுடனும், இதுதான் எங்கள் சுயமான அடையாளம் என எந்த அறிவிப்பும் இல்லாமலும், இந்தியாவே எங்களின் ஏகபோகம் என்ற கோஷத்துடனும், இந்தியத்தில் உள்ள எவராக இருந்தாலும் எங்களுக்குக் கட்டுப் பட்டவர்கள்தாம் என்ற அறிவிப்புடனும்,  இதனை மறுதலிப்பவர்கள் தேசத் துரோகிகள் எனும் குற்றச் சாட்டுகளுடனும் இந்தியத்துக்குள் இன்று இறுமாப்புடன் நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு நாசகார இயக்கம்தான்.

கடந்த காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசித் திரிந்து ஓடி ஒளிந்து கொண்டிருந்த இந்த இயக்கம், காங்கிரஸ் பேரியக்கத்தின் அசுத்த அருவருப்பு நடவடிக்கைகளால் இன்று கம்பீரம் பெற்று வெட்ட வெளிகளில் கூத்தாடுகின்றது.
 
ஆனாலும் கூட R.S.S.யின் தயாரிப்புகள் விஞ்ஞான பூர்வமாக உருவாகி வரும் தன்மை கொண்டது என்பதை மறுத்துவிட முடியாது.

இன்றைய ஊடகங்களிலும் சரி, கருத்தரங்கம் மற்றும் பொது மேடைகளிலும் சரி R.S.S. இயக்க நபர்களின் பட்டாளம் திடீரென்று புறப்பட்டு வந்து அநாவசியமாக , சரளமாகப் பேசித் தள்ளுகிறது.
இதற்கு முன்னர் இவர்களில் பலரும் எவராலும் அறிந்திராத பேர்வழியாக
இருக்கிறார்கள். அந்தரங்கத்தில் பல காலம் தயாரிக்கப்பட்டு, உடனடியாக
வெளியே வந்திருக்கிறார்கள். இதுதான் விஞ்ஞான பூர்வமான அணுகு முறை.
அந்தரங்கத்தில் இவ்வளவு நுணுக்கமான தயாரிப்புகள் நடைபெற்றிருக்கின்றன. தமிழகத்தில் பம்மாத்துப் பண்ணித் திரியும் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தனிமனிதப் பக்தியில் மூழ்கி முகவரிகளைத் தவறவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தைப் பயன் படுத்தி
பா... மிகச் சரியாகத் தயாராகி விட்டது. குற்றம் கொலு ஏறிவிட்டது.
கும்மாளம் போட்டவர்கள் குப்புறக் கிடக்கிறார்கள்.

இதற்கான விலையைப் பிற இயக்கங்கள் மிகச் சரியாகக் கொடுத்துத்தான் தீர வேண்டும்.

இந்தியம் என்பது இந்துத்துவா தேசியம்தான். இங்கே வாழ்கிற எவராயினும் சரி, அவர்கள் அனைவரும் இந்துத்துவாக் காரர்கள்தாம். தி..காரர்க ளானாலும், கம்யூனிஸ்ட்க ளானாலும், கிருத்துவர்க ளானாலும்,
முஸ்லிம்க ளானாலும் சரிதான் அனைவரும் பூர்வீக இந்துத்துவாக் காரர்கள்தாம். இதை எதிர்ப்பவர்களும் இந்துத்துவாக் காரர்கள்தாம்.
நாங்கள் தீர்மானித்து விட்டோம், இதை மீறக் கூடாது.

இதற்கும் பின்னும் முரண்படுபவர்கள் தேசத் துரோகிகள்.அவர்கள் இந்தத் தேசத்தை விட்டுத் தலைதெறிக்க ஓடி விட வேண்டும். இல்லையென்றால் அடித்து விரட்டப் படுவார்கள் . இப்படி ஆணவம் தலைக்கேறி.

R.S.S.காரர்களும், பா...காரர்களும் பேசத் தலைப்பட்டு விட்டார்கள். மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகள் அமோக வெற்றி வாய்த்ததால் இந்த வெறிப் போக்கு தலைதூக்கி இருக்கிறது.

இந்தியத்தில் வாழக் கூடியவர்கள் சமஸ்கிருதத்தைக் கட்டாயம் கற்றுத் தான் ஆக வேண்டும். அம் மொழியில் தான் இந்துத்துவாவின் கலாச்சாரம் பொதிந்து கிடக்கிறது.

அடுத்த படியாக ஹிந்தியும் கட்டாயம் படித்துத்தான் தீர வேண்டும். இந்துத்துவாவின் ஊன்றுகோல் அதுதான்.

நாங்கள் தேர்வு செய்திருக்கும் தெய்வங்களைத்தாம் அனைவரும் வணங்கி வழிபட வேண்டும். இதை ஏற்காதவர்கள் எதிராளிகள். தேச விதோதிகள்.
இதுதான் பாரதீய ஜனதா கட்சியின் உண்மையான அஜெண்டா.

இந்துத்துவா! இந்துத்துவா! என ஓலமிடுகிறார்களே அப்படி என்றால் என்ன?
அது நம் நாட்டின் பழம் பெரும் வாழ்வு முறையாக இருந்த இந்து மதங்கள் அல்ல.

இங்கே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நம் இந்து மதங்கள் அன்பு மயமானது. அரவணைப்புக் கொண்டது.அன்னியோன்யமானது.
மனிதநேயமிக்கது. பிளவுகளை என்றுமே விதைக்காதது.
 
இந்து மதத்தைக் கபளீகரம் செய்துவிட்டு, இந்திய யூத மதத்தின் நிழலாக இந்துத்துவாக் கோட்பாட்டைத் தலைசுமந்து முன்னெடுத்து வருகிறார்கள்.
பூர்வீக இந்து மதத்துக்குச் சமஸ்கிருதம் தேவ பாஷையல்ல. அதற்கு நான்கு வேதங்கள் வேதங்கள் அல்ல. சமஸ்கிருதங்களில் இந்து மதத்தின் கலாச்சாரம் கொட்டிக் கிடக்கவில்லை.
ஹிந்தி என்னும் ஒட்டு மொழி இந்து தர்மத்தின் ஊன்றுகோல் அன்று. ஆனால் இந்துத்துவாவுக்குச் சமஸ்கிருதம் அடிப்படைத் தேவை. ஹிந்திதான் அதன் ஊன்றுகோல்.

மனுதர்ம வாழ்க்கைக்குச் சமஸ்கிருதம் அடிப்படை. அந்தக் கலாச்சாரத்திற்குச் சமஸ்கிருதம் மூல மந்திரம்.

இத்தனையும் நம் இந்து மதத்தின் கோட்பாடே அல்ல. இவைகள் இந்துத்துவாவுக்குத் தேவையான அடிப்படைகள்.

இந்த இந்துத்துவாவின் வாசகஙகளுக்கும் அவர்களின் வாழ்வு முறைக்கும் ஏராளமான மூடு திரைகள் இருக்கும்.

எல்லோரும் ஒன்றாவோம் எனக் கோஷத்தை வைப்பார்கள்.ஆனால் உனக்கும் எனக்கும் அடிப்படையில் ஒன்றாகும் நீதி முறையே கிடையாதே
என்னும் மனுநீதி முறையில் வாழ்ந்து கொள்வார்கள்.

இந்தியத்தில் இஸ்லாமியர்களும் இந்துத்துவாக் காரர்கள்தாம். கிருஸ்தவர்களும் அப்படியேதாம். புத்தர்களும், சமணர்களும் இதற்கு விதிவிலக் கலலர் சீக்கியர்களுக்கும் இதுதான் பொருந்தும் எனக் கோஷம் எழுப்புவார்கள்.

ஆனால் தேசத்தின் பூரண உரிமை பெற்ற தலித்துகள் கோயிலுக்குள் ஏகமாக வந்தால் அடித்து விரட்டுவார்கள். அப் பெண்களை நிர்வாணப் படுத்திக் கொடுமை இழைப்பார்கள். இது சரி என்பதை நம்மில் பலருக்குக் கற்றும் தந்து விட்டார்கள்.

இதுதான் இந்துத்துவாவின் தீர்மானமான முடிவு எனவும் அறிவித்தும் விடுவார்கள். இதைப் புரிந்து கொள்ளத் தேவ பாஷையான சமஸ்கிருதம் கட்டாயம் படியுங்கள். இதில் தானே இந்தக் கலாச்சாரத்தின் நேர்மை சொல்லப் பட்டிருக்கிறது எனவும் சொல்கிறார்கள்.
 
ஆனால் இங்கிருந்த பூர்வீக இந்து மதம் இவற்றை ஒருபோதும் ஒப்புக் கொள்ளவே இல்லை.
நவீன கண்டு பிடிப்பான இந்துத்துவா, இதுதான் சட்ட விதி என நிலைநிறுத்தத் துடிக்கிறது. இதுவேதான் இந்திய யூத மதத்தின் நிஜமுகம்.
"சமஸ்கிருதம் படிக்காததினால் எல்லாத்தையும் இழந்து விட்டேன்" என ஒரு பச்சைத் தமிழ் மத்திய அமைச்சர் அங்கலாய்த்திருக்கிறார். அவர் எந்த வாழ்வுரிமையை இழந்து விட்டார்? அவருக்கும் புரியவில்லை. நமக்கும் விளங்கவில்லை.

தமிழ் மட்டுமே தாய் மொழியாகக் கொண்ட தமிழர் வாக்குகளால் வெற்றி பெற்றுப் பாரளு மன்றம் சென்று அமைச்சராகி, பின்னர் நல்ல விதமாக சமஸ்கிருத விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார். அடுத்த முறை சமஸ்கிருதம் தாய் மொழியாகக் பேசும் மக்கள் மத்தியில் நின்று வெற்றி பெற்று பிரதமராகட்டும்.
 
அவர் சமஸ்கிருதம் கற்று, இந்திய யூத மதத்தவர்களோடு தோள்கோர்த்து இணைந்து சமமாக வாழ்ந்து விடமுடியும் என்ற உத்தரவாதம் பெற்றிருக்கிறரா?

பாரசீக யூத மதத்திலும் உலகில் எவரும் சென்று சேர்ந்து விட முடியாது. இந்திய யூத மதத்திலும் இந்தியர் எவரும் சென்று சேர்ந்து விட முடியாது.
யூத மதத்தில் பிறக்கத்தான் முடியும். இந்திய யூத மதத்திலும் அப்படியேதான்.

யூத மதத்திற்குத் தனிச் சிறப்பு ஒன்று உண்டு. எந்த நல்லவைகளையும் அது தனதாக்கிக் கொள்ளும். பிறருக்குத் தேவையான அளவு கற்றுத் தரும்.
தங்களுக்கு அதன் மூலம் அவர்களை அடிமையாக்கிக் கொள்ளும். ஆனால் அவர்களை ஒருபோதும் தங்களுக்குச் சமமாக இணைத்தே கொள்ளாது.
 
யோகாசனம் என்ற ஒரு ஒப்பற்ற விஞ்ஞானத் துறையை, இந்திய ஞானிகள், சித்தர்கள், யோகிகள், ரிஷிகள் போன்ற ஞான நெறியாளர்கள் உருவாக்கித்
தந்தார்கள். அவற்றுக்குள் இந்துத்துவாவின் சமஸ்கிருத ஸ்லோகங்களைச்
சொருகி உருவேற்றி, இது இந்துத்துவாவின் அரிய கண்டு பிடிப்பு என முன்னெடுக்கிறார்கள். அதற்குள் மதத்தைப் புகுத்தி யோகாவைக் கற்பிழக்கச் செய்கிறார்கள்.

யோகவுக்குள் இன்னொரு சூட்சமமும் சுருட்டி வைக்கப்படுகிறது. உருவேற்றப்பட்ட சில மந்திரச் சொற்களைப் பயன்படுத்தி, மூளைச் சலவை (பிரைன் வாஷ்) செய்ய முடியும். அதன் மூலம் தங்கள் கோட்பாட்டை தீவிரமாகப் பதிய வைத்து நிரந்திர ஏவல்காரர்களாக மாற்றவும் முடியும்.
இதற்குத்தான் இந்த திடீர் மத யோக முன்னெடுக்கப் படுகிறது.

அமைதி, சக்தி, நம்மதி போன்ற உரிய வாழ்வை யோகாசனம் வழங்கக் கூடியது.

இந்த யோகாவைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தும் R.S.S. காரர்கள், பாரதீய ஜனதாக்காரர்கள் நடை முறையில் எவ்வளவு வன் கொடுமை யாளர்களாக இருக்கிறார்கள் என்பதே இதற்குச் சான்று. யோக வழியே வெறி ஏற்றப் படுகிறது.

யோகாசனம் விஞ்ஞான ஒளியில் வளர்த்தெடுக்கப் பட்ட ஞானம். அதில் மத வண்ணத்தை பூசி , பின்னர் விபரீதங்களைக் கலந்து விஷமாக்கும் தீவிரம்
நடத்தப்படுகிறது.
இதை எடுத்துச் சொல்லி விளக்கும் போது, அவர்களை மத விரோதிகளாகவும் தேசத் துரோகிகளாகவும் சித்தரிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் அடிப்படையில் யூத மதச் சிந்தனைகள் ஊடாடிக் கிடக்கின்றன.

யூத மதம் தன் இருப்பை முன்மைப் படுத்திக் கொள்ள எப்போதுமே தானே பல எதிரிகளை தயாரித்துக் கொள்ளும். அந்த எதிரிகளை நோக்கி மோதல்களை உருவாக்கிவிட்டுத் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும்.

பசு தெய்வம். அதைப் புசிப்பது தெய்வ நிந்தனை. அரக்க லட்சணம். என்றெல்லாம் போலித் தத்துவங்களை முன்னிலைப் படுத்திக் கொலைக் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
 
புராதன இந்து தர்மம் ஒரு போதும் இதற்கு உடன் பட்டதில்லை.
 
"அன்பை விதைப்போம்! அரவணைத்து வாழ்வோம்! " இது இந்து தர்மத்தின்
மூல மந்திரம்.
இதுவே இந்துத்துவாவிற்கோ அடி நாத நெருப்பு.

"எதிரிகளைப் படைப்போம்! மோதல்கள் ஸ்திரப் படுத்துவோம்! நமது தலைமையைத் தக்க வைத்துக் கொள்வோம்! " இதுதான் இந்திய யூத மதமான இந்துத்துவாவின் சத்திய தரிசனம்.

இதற்கு எதிர் வினை வந்துதானே தீரும்.
இஸ்லாமியத் தீவிர வாதம், கிருஸ்தவத் தீவிரவாதம் இப்போது முன்வந்து
ஆர்ப்பரிக்கின்றன. இந்திய யூத மதம் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதும் இதையேதான்.

இநதியர்கள் போலியான கோட்பாட்டு வீரியத்தால் போரிட்டுக் கொண்டே இருப்போம். சரமாரியாகச் சாவின் மடியிலே சரிந்து கொண்டே கிடப்போம்.
அப்போதுதான் இந்திய யூத மதம் சிம்மாசனம் போட்டுக் கிரீடம் சூட்டி அரசாட்சி புரிய முடியும்.
 
இத் தொடரை இந்தளவோடு தற்போது நிறுத்திக் கொள்ளலாம்.
( அடுத்து " அடையாளம் கரைந்த அவமானம் " என்ற தலைப்பின் கீழ்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகைப் பற்றிச் சிந்திப்போம். )

No comments:

Post a Comment