Thursday, June 30, 2016

பொல்லாத பூர்வீகம்....! ( 2 )



தமிழகத்தில் சைவ நெறி தன் தத்துவத்தைப் பேணிப் பாதுகாத்து வந்த காலத்தில் அமைதியும், நிம்மதியும், வளர்ச்சியும் செழித்திருந்தது.

அதேபோல் சமணத் தத்துவமும் அமைதியான ஒரு வாழ்க்கை முறையை இங்கே வழங்கிக் கொண்டிருந்தது.

புத்தமும் மன நிறைவோடு நடமாடிக் கொண்டிருந்தது.
 
இன்னும் ஏராளமான மதத் தத்துவங்கள் தங்கள் தங்கள் கோட்பாடுகளை
வீதியெங்கும் விதைத்து வந்தன.

சைவத்தை நேசித்தவர்கள் சைவத்தில் இணைந்து கொண்டார்கள். சமணத்தைப் நாடியவர்கள் சமணத்தில் சேர்ந்து கொண்டார்கள். புத்தத்தை விரும்பியவர்கள் புத்தத்தில் சங்கமித்துக் கொண்டார்கள். மனிதர்கள் தங்களுக்கு ஏற்ற தத்துவத்தைத் தழுவிக் கொண்டார்கள்.

இந்திய யூத மதத்திற்கு இது ஆபத்தாகத் தெரிந்தது. இங்கே இவ்வளவு அமைதி சூழ்ந்தால், தங்கள் தலைமைக்கு வாய்ப்பு வந்து வாய்க்காது எனத் தீர்மானித்தது. இவர்கள் மோதிக் கொண்டால் அந்த களேபரத்தில் தங்கள் தலைமை உறுதியாகும் என முடிவு கட்டியது.

அதுவரை தங்கள் தத்துவங்களைப் பிரச்சாரம் செய்து, வாழ்வு முறை வெளிப்படுத்தி வந்த தத்துவங்களுக்கு இடையே, எவர் தத்துவம் பெரியது? யார் வாழ்வு முறை தனித்துவமானது? எனப் புதிய போக்கை முன் வைக்க இந்திய யூதம் கற்றுக் கொடுத்தது.

தங்கள் தத்துவங்களைப் பேணுவதற்குப் பதிலாக அடுத்து தத்துவங்களுக்குப் பகையாக எல்லாத் தத்துவங்களும் மாற்றப் பட்டன.
சைவ, சமணப் படுகொலைகள் எல்லாம் இங்கே நிகழ்ந்த வரலாற்றின் பின்னணி இதுதான்.
 
சைவ, வைணவக் கோரத் தாக்குதல்களுக்கு எல்லாம் அடித்தளம் இதுதான்.
இந்திய யூத மத வெற்றிக் கோட்பாடே, சகலரையும் எதிராளியாக்கி மோதிக் கொள்ள விட்டுத் தங்களை மேன்மை படுத்திக் கொள்வதுதான்.

இந்தியத்தில் இருந்த எல்லா வாழ்க்கை முறைகளையும் ஒன்றிணைத்து, ஒரு உயர்ந்த தருமத்தை உருவாக்கி விட்டதாகச் சொல்லிக் கொண்டே தலைமை பீடத்தை மட்டும் தம் பக்கமே வைத்துக் கொண்டார்கள்.

எப்பொழுதெல்லாம் தங்களுக்குச் சிக்கல் வருகிறதோ? அப்போதெல்லாம் தங்களுடைய தத்துவ வாழ்க்கைக் கடைப்பிடிப்புகளைப் பிரச்சாரப் படுத்தாமல், மக்களுக்கிடையே பிரிவினைகளையும், கோரக் கொடூரத்
தாக்குதல்களையும், கொலைக்களத் தாண்டவங்களையும் சர்வ சாதாரணமாக நிகழ்த்தித் தங்கள் தலைமையைப் பவித்ரமாகப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

இதுவேதான் இந்திய யூத மத நடைமுறை. உலக யூத மத மூலாதார நடைமுறையும் இதுவேதான்.

இந்திய யூத மதத்தின் மடிப்பிள்ளைதான், R.S.S.

எப்போதெல்லாம் R.S.S.கவனிக்கப் படாமல் புறக்கணிக்கப் படுகிறதோ, அப்போதெல்லாம் மதக் கலவரம் தலைதூக்க ஆரம்பிக்கும். இனக் கலவரத்துக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படும். ஜாதிய தாக்குதல் உருவாக்கப்படும். முடிவில் R.S.S.கோட்டையின் தலைமை ஊர்ஜிதப் படுத்தப்படும்.

இந்து தர்மம், பல உன்னதமான வாழ்வுத் தத்துவங்களால் பல ஆயிரம் ஆண்டுகள் கண்டுள்ள உயரிய அரிய வாழ்வு முறை கொண்டது. அன்பு மயமான அரவணைப்பு கொண்டது.அமைதியும் நிம்மதியும் நிறைந்தது.
இந்தத் தர்மத்தைக் குலைக்க முடிவு கட்டிய இந்திய யூத மதம், ஒரு புதிய கலப்புத் தத்துவத்தை முன்வைக்கிறது, அதுதான் இந்துத்துவா.

இந்து மதம் வேறு, இந்துத்துவா முற்றிலும் வேறு.

இந்து தர்மம் பழமையான உயரிய நன்னெறி சான்ற அமைதித் தத்துவம்.
இந்துத்துவா என்பது இந்திய யூத மதத்தின் பொல்லாத மூளையின்
கலவைக் கொலை வெறிக் கோரத் தத்துவம்.

R.S.S. எனற இந்திய யூத மதம் தன்னைத் தக்கவைக்க வேண்டுமானால், அதன் ஆபத்தான கண்டு பிடிப்பான இந்துத்துவா எனும் கோரக் கொலை வெறி ஆயுதத்தைத் தனது கைவசம் எடுத்துத்தான் ஆகவேண்டும்.

தற்கால அதன் உயிர் வாழ்க்கைக்கு அதுவே முற்றும் முடிவான தீர்வாகும்.
இதனை உருவாக்க R.S.S. ஜனசங்கத்தைப் பெற்றெடுத்தது. அந்த ஜனசங்கம் பாரதீய ஜனதா எனப் பரிணாமம் கண்டுள்ளது.

படு கொலைகளையும் பயங்கர தாக்குதல்களையும் நிகழ்த்தி இந்திய மக்கள் ஒற்றுமையைக் குலைத்து மதவெறி நெருப்பை இலவசமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறது, R.S.S.

இந்துத்துவா என்கிற பெயரில் கொலைக் கருவி தயாராகும் போது, அந்தக் கருவிக்கு எதிர் கருவியாக முஸ்லிம் தீவிரவாதம் என்கிற படு பாதகக் கொலைக் கருவியும் தயாராகி விடுகிறது. மதம் என்னும் குணப்பாடே
இப்படித்தான் இருக்க முடியும். முடிவு என்னவோ அழிவுதான்.  

வாழ்வென்னவோ இந்திய யூத மதத்துக்குத்தான்.

கொலைக் கருவிகள் தயாராகி விட்டன. கொலைக் களங்களோ சிந்தும் ரத்தங்களை விழுங்கிக் கொண்டே இருக்கின்றன.இந்திய மக்கள் குரோத, விரோத புகை மூட்டத்துக்குள் பூரணமாகப் புதையுண்டிருக்கிறார்கள்.

இந்திய யூத மதம் மீண்டும் தன் தலைமையைத் தக்க வைத்துக் கொள்கிறது. 

No comments:

Post a Comment