1947-ஆம் ஆண்டுக்கு
முன்னாலுள்ள இந்தியா, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஆளுமைக்குக் கீழ் பிரச்சினைகளால் சூழப்பட்ட இந்தியாவாகத்தான் இருந்தது.
இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராகச் சுதந்திரப் போராட்டஙகளை இந்தியா நிகழ்த்திக் கொண்டே வந்திருக்கிறது.
ஆங்கில ஆதிக்கம் இந்திய எல்லையைத் தன்போக்கிற்கு ஏதுவாக தாறுமாறாக விரித்து வைத்திருந்தது.
இன்றைய இந்தியாவுடன் அன்றைய பாக்கிஸ்தானும் இந்தியாவாகவே கருதப் பட்டது.
பங்களா தேசமும் இந்த வரைபடத்துக்குள் ஒட்டி இருந்தது. ஆப்கானிஸ்தான்
உடைய ஓரம் சாரமும் இந்தியா என்ற இணைப்பில் இருந்தது.
உடைய ஓரம் சாரமும் இந்தியா என்ற இணைப்பில் இருந்தது.
இந்த வரைப் படத்தை அப்படியே நம் மனக்கண் முன்பு கொண்டு வந்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆப்கான் முழுப் பகுதியும் அன்றும் இந்தியாவுக்குள் இல்லை. ஆப்கானுக்கென்று ஒரு தனிக் குணாம்சம் உண்டு. 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அது ஆப்கானுடன் ஒட்டிக் கொண்டே வருகிறது.
ஆப்கான் முழு தேசத்தையும் உலகின் எந்தவொரு வல்லரசாலும் தன் கட்டுப் பாட்டில் முழுக்க வைத்திருக்க முடிந்ததே இல்லை,
இப்படிக் கூடச் சொல்லலாம், உலகின் எந்த வல்லரசானாலும் ஆப்கானிடம்
தோற்றுத்தாம் போய் இருக்கிறது. ஆங்கில ஆதிபத்தியமும் இதற்கு விதி விலக்கல்ல.
தோற்றுத்தாம் போய் இருக்கிறது. ஆங்கில ஆதிபத்தியமும் இதற்கு விதி விலக்கல்ல.
ஆப்கான் எப்போதும் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளும். தன்னைத் தானே படுகுழிக்குள் தள்ளி தானே மண்ணை வாரிப் போட்டு மூடியும் கொள்ளும் .
புராண கால மகா பாரதப் பாத்திரமான சகுனியின் தாய் நாடும் ஆப்கான்தான்.
ஆப்கான் காந்தாரத்தின் அரசியல் எப்போதுமே சதி நிறைந்ததாகவும் ஆக்கம் கொண்டதாவும் வீழ்ச்சி பெற்றதாகவும்தான் எப்போதும் வரலாற்றில் இருந்து வருகிறது.
பாக்கிஸ்தான் பாமரத் தனத்திலும் அடிமைகள் குணத்திலும் ஏதாவது ஒரு தலைமைக்குக் கீழே கண்ணை மூடிக் கொண்டு தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் விநோதமான பூமி.
வங்காள தேசமும் எழுச்சி பெறாத அடிமைத் தனம் கனிந்த பூமியாகத்தான்
திகழ்ந்தது.
திகழ்ந்தது.
இன்றைய நம் இந்தியா என்ற எல்லைப் பகுதியில் இந்த அத்தனை தன்மைகளும் கலவைகளாக நிரம்பி இருந்தன.
இநத முழு இந்தியாதான் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க கால காலமாகச் சுதந்திர வேட்கைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் வரலாற்றை நாம் நம்பிக் கொண்டிருந் திருக்கிறோம்.
இந்தியச் சுதந்திர வரலாற்றைத் தலைமை தாங்கிய தலைவர்கள் அனைவரும் எங்கே தயாராகி இருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து பார்த்தால்,
ஒரு வெளிச்சம் சில உண்மைகளை நமக்கு வெளிப்படுதிக் காட்டுகின்றன.
இன்றையப் பாக்கிஸ்தான் பகுதியில் இருந்து எத்தனைத் தலைவர்களை
சுதந்திர வரலாறு நமக்கு அடையாளம் காட்டுகின்றன?
சுதந்திர வரலாறு நமக்கு அடையாளம் காட்டுகின்றன?
எவ்வளவு மக்கள் போராட்டங்கள், எழுச்சி, புரட்சி வடிவங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன?
பங்களா தேசத்தை நோக்கி யும் இப்படி ஒரு பார்வையை நாம் அனுப்பிப்
பார்த்தால் அங்கேயும் இதே கேள்விகள்
நம்மை எதிர் நோக்கி நிற்கின்றன.
ஆப்கான் ஓரஞ் சாரப் பகுதிகளில் அன்று நடந்த ஒட்டு மொத்த இந்திய சுதந்திரப் போராட்டத்தில்,
எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான் நமக்குத் தென்படுகிறார். அவர் சார்ந்த மக்கள் போராட்டக் குழு காட்சிப் படுகின்றன.
ஆனால் இன்றைய இந்தியப் பகுதியின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும்
சுதந்திர வரலாறு சகட்டு மேனிக்கு ஏராளமாக தலைமைகளைப் பதிவு செய்திருக்கிறது.
சுதந்திர வரலாறு சகட்டு மேனிக்கு ஏராளமாக தலைமைகளைப் பதிவு செய்திருக்கிறது.
இமயமலை தொடங்கி குமரிக் கடல்வரையாக வட, தென் எல்லைகளிலும்
மேற்கு கிழக்கு பகுதிகளான அரபிக்கடல், வங்காள விரிகுடாக்கடல் முடிய உள்ள பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் கூட்டங் கூட்டமாகச் சுதந்திரப் போராட்டத்தில் போராடி இருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். உயிர்ப் பலி வழங்கி இருக்கிறார்கள்.

இங்கிருந்துதான் மகாத்மா காந்தி உருவானார். சட்ட மாமேதை அம்பேத்கார்
தயாராகினார். சுபாஷ் சந்திர போய் முன் எழுந்துள்ளார். மவ்லானா சவுக்கத் அலி, முஹம்மதலி என்னும் அலி சகோதரர்கள் ,அவர்களின் தாயார் பீவி அம்மையார்,முஹமதலி ஜின்னா போன்றோர்கள் வெளி வந்தார்கள். லாலா லஜபதிராய், லோக மான்ய திலகர், கோபால கிருஷ்ண கோகலே. கப்பட்ட தமிழர் வ.உ.சிதம்பரனார்,சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதி, பகத் சிங், ஜக்தேவ், போன்ற லட்சக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் இன்றைய இந்திய எல்லைக்குள்தான் முளைத்தெழுந்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

1947-ஆம் ஆண்டில் சுதந்திம் வந்து விட்டது. இந்தியாவில் ஆசிய ஜோதி பண்டித நேரு பிரதமரானார். இராஜேந்திர பிரசாத் ஜனாதிபதியானார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியானார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியானார்.
பாக்கிஸ்தானுக்கு முஹமதலி ஜின்னா தலைமை தாங்கினார். பாக்கிஸ்தான் தனி நாடானது. பங்களா தேசம் பாக்கிஸ்தானில் மறைந்து இருந்தது.
பாக்கிஸ்தானும் பங்களா தேசமும் பாரதூரமான அளவு சுதந்திரப் போர்க் களத்தைச் சந்தித்ததாகச் சரித்திர ஏடுகள் பெரிய அளவில் பதிவு செய்திருக் வில்லை.
No comments:
Post a Comment