பள்ளிவாசல்
உண்டியலில்
பத்து ரூபாய்
போட்டேன்!
பாவ அழுக்கைப்
பனி மறைத்தது!
பாதையில் கிடந்த
கண்ணாடிச் சில்லை
அகற்றினேன்!
பாவ அழுக்கைக்
காற்று அசைத்தது!
ஏழை ஒருவனின்
பசித்த
வயிற்றுக்காகச்
சிந்திக்கத்
தொடங்கினேன்!
பாவ அழுக்கின்
அடையாளமே
தப்பிப்போனது!
No comments:
Post a Comment