2016--ஆம் ஆண்டு தமிழகத்தினுடைய மாநிலப் பொதுத் தேர்தல் முடிவுகள்
வெளிவருவதற்கு முன்னும் பின்னுமாக எத்தனை எத்தனை விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டு வருகின்றன?
வெளிவருவதற்கு முன்னும் பின்னுமாக எத்தனை எத்தனை விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டு வருகின்றன?
இந்த அத்தனை விமர்சனங்களும் சரியானவையோ...? தவறானவையோ..? இவைபற்றிய ஆராய்ச்சிகளைச் சற்றே ஒதுக்கி விட்டு, வெளியே நின்று இந்தத் தேர்தல் களத்தை நாம் உற்று கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அ.இ.அ.தி.மு.க ஆண்டு வந்த கட்சி, தி.மு.க ஆட்சியை ஏற்கனவே இழந்து
மீண்டும் கைப்பற்றத் தீவிரம் காட்டிய கட்சி.
மீண்டும் கைப்பற்றத் தீவிரம் காட்டிய கட்சி.
மக்கள் நலக் கூட்டணி, தொடக்கத்தில் மாற்றம் தேவை என்ற கோஷத்தை
முன் வைத்து மக்களைச் சந்தித்த கட்சி.
முன் வைத்து மக்களைச் சந்தித்த கட்சி.
பாட்டாளி மக்கள் கட்சி, எங்களால்தான் ஆள முடியும் எங்களை எவரும் ஆளத் தேவையில்லை, என்ற ஓசையைத் தூக்கித் திரிந்த கட்சி.
தே. மு.தி.க, நாங்கள் கிங் மேக்கரல்ல, கிங்குகள் என்ற பாணியில் திரைவசனம் வழங்கித் துள்ளிக் குதித்த கட்சி.
நாம் தமிழர், நாங்கள் மட்டுமே தமிழர்கள் தமிழகம் எமதே என்று சங்கே முழங்கு தோற்றத்தில் சப்தித்து வந்த கட்சி.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், நாங்கள் விசுவாசிகள். நன்றி பாராட்டும் பண்பாளர்கள் எனவே தி.மு.க வுக்கு வாக்களிக்கும் ஆறாவது கடமையாளர்கள் என அறிவித்து தெருவுக்கு வந்த கட்சி.
த.மு.மு.க, நாங்கள் தன்மானக்காரர்கள் அதனால் தி.மு.க வைத் தழுவிக் கொள்கிறோம் எனத் தெளிவு படுத்திய கட்சி.
த. மு. மு.க வில் இருந்து தப்பி வந்த தமிமுல் அன்சாரி கட்சி, நாங்கள் வெற்றியாளர்கள் எனவே அ.இ.அ.தி.மு.க வின் பரிவாரமாகவே மாறி,
கம்பளம் விரித்துக் காத்து வருகிறோம் எனச் சொல்லி அ.இ.அ.தி.மு.க
தலைமை நிலைய வாசலில் தயாராக நின்ற கட்சி.
கம்பளம் விரித்துக் காத்து வருகிறோம் எனச் சொல்லி அ.இ.அ.தி.மு.க
தலைமை நிலைய வாசலில் தயாராக நின்ற கட்சி.
காங்கிரஸ் பேரியக்கம் நாங்கள் சூடு சொரணை நிரம்பியவர்கள், அதனால் தி.மு.க வின் தாழ்வாரத்தில் தனிஆவர்த்தனம் வாசிக்கிறோம் எனப் புறப்பட்ட
கட்சி.
காங்கிரஸ் கட்சியில் இருந்து துடித்துத் தெறித்த வாசன் கட்சி,
வழி தேடி முடிவில் மக்கள நலக் கூட்டணிக்குள் குதித்த கட்சி.
வழி தேடி முடிவில் மக்கள நலக் கூட்டணிக்குள் குதித்த கட்சி.
பாரதீய ஜனதா கட்சி, புனிதமே எங்கள் சொந்தம் நாங்கள் வான் வழி இறங்கி வந்து சேர்ந்திருக்கும் தெய்வ சாட்சியங்கள் எனச் சொல்லி தமிழகத்தைத் துளை போட வந்த கலவரக் கட்சி.
தமிழகத் தேர்தல் களம் மேலே சொன்ன திருவிழாக் காட்சியாகத்தான்
காட்சிப் பட்டது.
காட்சிப் பட்டது.
அ.இ.அ.தி.மு.க வை தவிர அனைத்துக் கட்சிகளும் மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் எனக் கூக்குரல் போட்டன.
பிரதானப் பெரிய கட்சி தி.மு.க, முன்மொழிந்தது. "ஆளும் அ. இ.அ தி.மு.க விற்கு" மாற்றம் நாங்கள்தாம் என்று.
காங்கிரஸ் , யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க, தவிர்த்த பிற அனைத்துக்
கட்சிகளும், அ .இ.அ.தி.மு.க, மற்றும் தி.மு.க ஆகிய இரண்டையும் தவிர்த்து மாற்றம் தேவை என்ற பிரச்சாரத்தை முன் வைத்தன.
கட்சிகளும், அ .இ.அ.தி.மு.க, மற்றும் தி.மு.க ஆகிய இரண்டையும் தவிர்த்து மாற்றம் தேவை என்ற பிரச்சாரத்தை முன் வைத்தன.
இந்தத் தேர்தல் களத்தில் மாற்றம் என்ற கோட்பாடே மகத்தான வேத மொழி போல் உச்சரிக்கப் பட்டது.
மக்கள் நலக் கூட்டணி மட்டுமே இந்த மாற்றம் என்ற கோட்பாட்டை
துவக்கத்தில் தெளிவான முறையில் முன்வைத்தது.
துவக்கத்தில் தெளிவான முறையில் முன்வைத்தது.
அரசியலில் பழுத்த பழம் மு. கருணாநிதி ஒரே அறிவிப்பில் மாற்றம்
என்ற சொல்லின் பொருளையே மாற்றி விட்டார்.
என்ற சொல்லின் பொருளையே மாற்றி விட்டார்.
இந்தப் பாணி , தமிழக அரசியலில் அவர் அனுபவத்தின் மூலம் கண்டெடுத்த
வழக்கமான கொச்சை அனுபவம்தான்.
வழக்கமான கொச்சை அனுபவம்தான்.
எல்லாக் கட்சிகளும் மாற்றம் என்று சொல்லும் பொழுது, "முழுவதுமாகத்
துடைத்தெடுத்தல்" என்ற சரியான பொருள் கிடைத்தது.
துடைத்தெடுத்தல்" என்ற சரியான பொருள் கிடைத்தது.
அதாவது அ.இ.அ.தி.மு.க வும், தி.மு.க வும் எல்லாவகையிலும் சகோதரத் தன்மை கொண்டவைகள்தாம் ஊழலானாலும் சரி நிர்வாகச் சீர்கேடானாலும் சரி சுரண்டலானாலும் சரி அவைகள் தாயத்தார் உறவு முறைகள்தாம். எனவே அவைகளுக்கு மாற்றம் வேண்டும் என்று சொல்லும் போது, மாற்றம் என்ற சொல் சரியான சொல்லாகப் பயன்பட்டது.
கருணாநிதி,
திடீரென்று ஒரு குண்டைத் தூக்கி எறிந்தார். அ. இ.அ.தி.மு.க விற்கு மாற்றம் தி.மு.க.தான் என்றார்.
சுருக்கமாக இளைய தம்பிக்கு
மூத்த அண்ணன் மாற்றம் என்றார்.
இந்தச் சகோதரர்களே தவறானவர்கள் .இவர்கள்தான் மாற்றப்பட வேண்டும்
என்ற நியாயமான மாற்றத்தின் உச்சந் தலையில் கருணாநிதி கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார்.
என்ற நியாயமான மாற்றத்தின் உச்சந் தலையில் கருணாநிதி கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார்.
மாற்றம் என்ற சொல்லின் பொருள் தன்னைத் தற்கொலை செய்து கொண்டது. அ .இ.அ.தி.மு.க விற்கு நாங்கள்தான் சரியான எதிரிகள் என்று குறுகிய பொருளில் மாற்றம் என்ற ஆழமான பொருள் சுருங்கிப் போய் விட்டது.
தி.மு.க விற்கு, அ.இ.அ.தி.மு.க எதிர்முகாம். அ.இ.அ.தி.மு.க விற்கு, தி.மு.க எதிர் முகாம் என்றொரு பழைய திசையைக் கருணாநிதி சுலபமாகக் காட்டி விட்டார்.
தேர்தல் களம் சிதறத் தொடங்கியது.
பிற கட்சிகள் தி.மு.க பக்கமோ, அ.இ.அ.தி.மு.க பக்கமோ போய் விடக் கூடாது என்ற தேர்தல் யுக்தி மற்ற கட்சிகளின் மண்டைக்குள் குடைய ஆரம்பித்து விட்டது.
இதன் விளைவால்தான், துவக்கம் முதல் சரியாகப் பயணப் பட்ட மக்கள் நலக் கூட்டணிக்குப் பார்வைக் கோளாறு வரத் துவங்கியது.
தமிழக அரசியல்வாதிகள் தவறான பார்வையை விஜயகாந்தின் தே.மு.தி.க மீது வைத்திருந்தனர். 8 % இருந்து 10%வாக்கு அவர்களுக்கு இப்போதும் இருப்பதாக
ஒரு போலிக் கற்பனையில் கிடந்தார்கள். ஆனால் உண்மையில்
விஜயகாந்திற்கு அந்தச் செல்வாக்கு இல்லை.
விஜயகாந்திற்கு ஆரம்பக் காலங்களில் அப்படி இருந்தது உண்மை. அடுத்து வந்த காலங்களில் அவருக்கு அது இல்லை என்பது அதைவிட உண்மை.
தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு.
" கொக்கு எறிந்த கல்லை மடியில் கட்டித் திரிந்தது போல" என்பதுதான் அந்தப் பழமொழி.
ஒருவன் குளத்துக் கரையில், இரைதேடிக் கொண்டிருந்த கொக்கின் மீது கல்லை விட்டு எறிந்தானாம். அது கொக்கின் மீது பட்டுக் கொக்கு விழுந்து விட்டது.
சிறிது நேரங் கழித்து மீண்டும் இன்னொரு கொக்கின் மீது வேறொரு கல்லை எறிந்தானாம். ஆனால் இந்தக் கொக்கு பறந்து போய் விட்டதாம். பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னான் . இந்தக் கற்களால் கொக்கைக் கொல்ல முடியாது. முதலில் கொக்கு எறிந்தாயே
அந்தக் கல்தான் கொக்கெறியும் கல். அதை எடுத்து வந்து எறி என்று.
கொக்கு எறிந்தவனும் கொக்கு விழுந்த இடத்தில் போய் ஒரு கல்லை எடுத்து வந்து அதுதான் கொக்கெறியும் கல் என முடிவு செய்து அதைக் கவனமாக மடியில் கட்டிக் கொண்டு கொக்கைத் தேடித் திரிந்தானாம்.
இந்தக் கொக்கெறிந்த கல்தான் விஜயகாந்த். இந்தக் கல், தி.மு.க வசமோ,
காங்கிரஸ் இடமோ, பா.ஜ.க பக்கமோ போய் விடக் கூடாது என்னும் முனைப்பில் மக்கள் நலக் கூட்டணி ஓடி ஓடிச் சென்று அந்தக் கொக்கெறிந்த கல்லைத் தன் மடியில் கட்டிக் கொண்டது.
காங்கிரஸ் இடமோ, பா.ஜ.க பக்கமோ போய் விடக் கூடாது என்னும் முனைப்பில் மக்கள் நலக் கூட்டணி ஓடி ஓடிச் சென்று அந்தக் கொக்கெறிந்த கல்லைத் தன் மடியில் கட்டிக் கொண்டது.
மக்கள் நலக் கூட்டணி அதுவரை முன் வைத்து வந்த மாற்றம் எனும் உண்மைப் பொருளை மதிப்பிழக்கச் செய்து விட்டது. மக்கள் மத்தியில் எதிரணி என்ற சிந்தனை வந்து விட்டது.
"இந்த அணி வேண்டுமா? அந்த அணி வேண்டுமா? " என்கிற விளையாட்டுக் குணம் சிந்தையில் நிரம்பி விட்டது.
கருணாநிதி மாற்றத்தின் பொருளை மாற்றி விட்டார். அதற்குத் தோதாக
மக்கள் நலக் கூட்டணி கொக்கெறிந்த கல்லை மடியில் கட்டித் தன்னை மாற்றிக் கொண்டது.
மக்கள் நலக் கூட்டணி கொக்கெறிந்த கல்லை மடியில் கட்டித் தன்னை மாற்றிக் கொண்டது.
"இளைய தம்பிக்கு ( அ.இ.அ.தி.மு.க ) வெற்றி. மூத்த அண்ணனுக்கு (தி.மு.க ) அதைவிடக் குறைந்த வெற்றி என்ற முடிவைத் தேர்தல் களம் இறுதியில் வழங்கி விட்டது.
உனக்கு எதிரணி நான். எனக்கு எதிரணி நீ, எனும் பிம்பம் வெளிப்பட்டு விட்டது.
நாளையத் தமிழகச் சட்ட மன்றம் குடும்பச் சண்டை போடுவது போல்
பொய்ச் சண்டை போட்டுக் கொள்ளும். திரைக்குப் பின் பங்கு போட்டுக் கொள்ளும் உண்மைப் பங்காளிகளாகத்தான் இருக்கும்.
பொய்ச் சண்டை போட்டுக் கொள்ளும். திரைக்குப் பின் பங்கு போட்டுக் கொள்ளும் உண்மைப் பங்காளிகளாகத்தான் இருக்கும்.
நிறுத்தி வைக்கப் பட்ட இரு தொகுதி தேர்தல்களின் தேதி நீதிமன்ற ஆலோசனையால் மாற்றி வைக்கப் பட்டதற்கு நேரடியாக வீதிக்குப் போராட வரப் போகிறாராம் கருணாநிதி.
இனிமேல் இப்படித்தான் தி. மு .க செயல்படும் என்பதை அ.இ.அ.தி.மு.க விற்கு மறைமுகமாக அறிவித்து விட்டார்.
புழக்கடை வழியாக பேரம் பேச தயார் எனும் அறிவிப்பு வந்தாயிற்று.
இதற்கு ஒரே மாற்றம். மாற்றம் என்ற சொல் அதனின் உண்மைப் பொருளில் மக்கள் மத்தியில பிரச்சாரப் படவேண்டும்.
No comments:
Post a Comment