Sunday, May 29, 2016

ஓர் அற்புத நினைவோட்டம்...!



தேர்தல் ஒரு வழியாக நிறைவேறி விட்டது. அத்தனை நடைமுறைகளும் நடந்தேறி விட்டன. இத்தேர்தல் பற்றிக் கொஞ்சம் நீளமான அலசல் அவசியப்படுகிறது .

சற்றுப் பின்னர் எழுத இருக்கிறேன். இன்று ஒரு கடந்த கால எண்ணத்தை மீண்டும் என் மனம் அசைபோடுகிறது. அந்த மனக் கனத்தை இங்கே இறக்கி வைக்கிறேன்.

கடைய நல்லூர் தொகுதி தென்காசித் தொகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த தொகுதி. பின்னர் தனியான தொகுதியாகப் பரிமாணமானது. அதன் முதல்
சட்டமன்ற உறுப்பினர், . ஆர். சுப்பையா முதலியார். இவர் தி. மு. வின்
எம். எல். .வாகத் தேர்வானார்.

இந்தத் தேர்தலுக்கு முந்திய தேர்தலில் தென்காசித் தொகுதியில் போட்டி போட்டு வென்றார்.இத் தேர்தலில் கடைய நல்லூர் தென்காசித் தொகுதியில் இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டி போட்டார். இவரை எதிர்த்து, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை நிறுத்தியது. அவர்தான் .கே. ரிபாய் சாஹிப். இது நடந்தது 1962-ஆம் ஆண்டு. முஸ்லிம் லீக் தோற்றது.

பின்னர் 80-ம் ஆண்டு கடைய நல்லூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளரை நிறுத்தியது. அவர் .கே. ரிபாய் சாஹிபின் தம்பி சாகுல் ஹமீது சாஹிப். இவர் "விட்டோம் பிழைத்தோம்" என்ற கதிவேகத்தில் 3000-க்கு உட்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அண்ணன் தம்பி இருவருமே தி.மு.. கூட்டணியில்தான் நின்றார்கள்.
அண்ணன் தோற்றார். தம்பி வென்றார்.

அதன் பின் மாவட்ட முஸ்லிம் லீக், தென்காசி மற்றும் கடைய நல்லூரை,
தேர்தலில் தன் தொகுதியாகக் கணக்கில் வைப்பதேயில்லை.

இப்போது மீண்டும் முஸ்லிம் லீக் கடைய நல்லூரில் போட்டி போட்டு பழைய நிலையிலேயே "விட்டாப் போதும். பிழைத்துக்கிறேன்" என்று வென்றுள்ளது. பாராட்டுகள். என் அருமைத் தம்பி மாநிலப் பொதுச் செயலாளர் அபூ பக்கர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இப்போதும் சொல்கிறேன் இந்த இரு தொகுதிகளும் லீக்கின் தொகுதிகளே
அல்ல. இது பற்றி ஒரு விரிவான அலசலை அடுத்துப் பதிவிடுகிறேன்.

சாகுல் வாப்பா M.L.A. ஆகி விட்டார்கள். சட்ட மன்றத்தில் முதல் பேச்சு.
கன்னிப் பேச்சுப் பேசப் போகிறார்கள்.

நான் அப்போது வட சென்னை மாவட்டச் செயலாளர். என்னிடம் "கன்னிப் பேச்சை எப்படி அமைக்கலாம். உன் கருத்தைச் சொல்லுடா" எனச் சாகுல் வாப்பா கேட்டார்கள்.

நான் சொன்ன பதில்

வாப்பா! உங்கள் பேச்சு சட்ட மன்றத்துச் சரித்திரத்தில் என்றும் ஒரு மைல் கல்லாக இருக் வேண்டும். "சட்ட மன்ற அவைக்குள்ளே உறுப்பினர்கள் தங்கள் தங்கள் தலைவர்களின் காலில் விழுந்து வணங்கிப் பதவி ஏற்கிற முறை அண்மைக் காலங்களில் ஒரு சம்பிரதாயமாக மாறி வருகிறது.
இது தவறான பாதையாகப் படுகிறது.

நான் ஒரு முஸ்லிம் என்பதால் இதைச் சொல்ல வில்லை. ஒரு சட்ட மன்ற உறுப்பினனாகச் சொல்கிறேன்.

இந்த அவைக்குள்ளே நான் என் தொகுதி மக்களின் பிரதிநிதியாகத்தான்
செயல்பட முடியும்.

நான் என் தலைவன் காலில் பணிந்தால் என் தொகுதி மக்களே பணிவதாகத்தான் பொருள். என் தொகுதி மக்களை எவர் காலிலும் விழ வைக்க எனக்கு என் உரிமை இருக்கிறது?. இது ஒரு பகீரங்கமான அத்துமீறல்.

இது சட்ட மன்றம். இதை நான் பள்ளி வாசலாகக் கருதக் கூடாது. ஒரு கிறித்துவர் இதைச் சர்ச்சாகப் பாவிக்கக் கூடாது. ஒரு இந்து இதை கோயிலாகக் கொள்ளக் கூடாது.

வணங்க வேறு இடங்கள். சட்டம் சமைக்கச் சட்டம் மன்றங்கள்.
இதையே என் கன்னிப் பேச்சாகப் பதிவு செய்கிறேன்" என்று பேசுங்கள் வாப்பா எனக் கூறினேன்.

மனநிறைவாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் மறுநாள் சட்டம் மன்றத்தில் பேசவில்லை.

மறுநாள் நான், சின்ன வாப்பாவிடம் இது பற்றிக் கேட்டே விட்டேன்.

சின்ன வாப்பாவும் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"இப்படிப் பேசக் கூடாது. கலைஞருக்கு மனம் வருத்தம் தரும். தம்பி ஹிலால் சுலபமாக உங்களை மாட்டி விடுகிறார்" என அப்துல் லத்தீப் சாஹிப் கூறித் தடுத்துவட்டாராம்.

இந்த நிகழ்வு இப்போது என் நினைவோட்டத்தில் திடீரென்று வந்து குந்திக் கொண்டது.

கொக்கு எறிந்த கல்...!



2016--ஆம் ஆண்டு தமிழகத்தினுடைய மாநிலப் பொதுத் தேர்தல் முடிவுகள்
வெளிவருவதற்கு முன்னும் பின்னுமாக எத்தனை எத்தனை விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டு வருகின்றன?

இந்த அத்தனை விமர்சனங்களும் சரியானவையோ...? தவறானவையோ..? இவைபற்றிய ஆராய்ச்சிகளைச் சற்றே ஒதுக்கி விட்டு, வெளியே நின்று இந்தத் தேர்தல் களத்தை நாம் உற்று கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

...தி.மு. ஆண்டு வந்த கட்சி, தி.மு. ஆட்சியை ஏற்கனவே இழந்து
மீண்டும் கைப்பற்றத் தீவிரம் காட்டிய கட்சி.

மக்கள் நலக் கூட்டணி, தொடக்கத்தில் மாற்றம் தேவை என்ற கோஷத்தை
முன் வைத்து மக்களைச் சந்தித்த கட்சி.

பாட்டாளி மக்கள் கட்சி, எங்களால்தான் ஆள முடியும் எங்களை எவரும் ஆளத் தேவையில்லை, என்ற ஓசையைத் தூக்கித் திரிந்த கட்சி.

தே. மு.தி., நாங்கள் கிங் மேக்கரல்ல, கிங்குகள் என்ற பாணியில் திரைவசனம் வழங்கித் துள்ளிக் குதித்த கட்சி.

நாம் தமிழர், நாங்கள் மட்டுமே தமிழர்கள் தமிழகம் எமதே என்று சங்கே முழங்கு தோற்றத்தில் சப்தித்து வந்த கட்சி.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், நாங்கள் விசுவாசிகள். நன்றி பாராட்டும் பண்பாளர்கள் எனவே தி.மு. வுக்கு வாக்களிக்கும் ஆறாவது கடமையாளர்கள் என அறிவித்து தெருவுக்கு வந்த கட்சி.

.மு.மு., நாங்கள் தன்மானக்காரர்கள் அதனால் தி.மு. வைத் தழுவிக் கொள்கிறோம் எனத் தெளிவு படுத்திய கட்சி.

. மு. மு. வில் இருந்து தப்பி வந்த தமிமுல் அன்சாரி கட்சி, நாங்கள் வெற்றியாளர்கள் எனவே ...தி.மு. வின் பரிவாரமாகவே மாறி,
கம்பளம் விரித்துக் காத்து வருகிறோம் எனச் சொல்லி ...தி.மு.
தலைமை நிலைய வாசலில் தயாராக நின்ற கட்சி.

காங்கிரஸ் பேரியக்கம் நாங்கள் சூடு சொரணை நிரம்பியவர்கள், அதனால் தி.மு. வின் தாழ்வாரத்தில் தனிஆவர்த்தனம் வாசிக்கிறோம் எனப் புறப்பட்ட கட்சி.

காங்கிரஸ் கட்சியில் இருந்து துடித்துத் தெறித்த வாசன் கட்சி,
வழி தேடி முடிவில் மக்கள நலக் கூட்டணிக்குள் குதித்த கட்சி.

பாரதீய ஜனதா கட்சி, புனிதமே எங்கள் சொந்தம் நாங்கள் வான் வழி இறங்கி வந்து சேர்ந்திருக்கும் தெய்வ சாட்சியங்கள் எனச் சொல்லி தமிழகத்தைத் துளை போட வந்த கலவரக் கட்சி.

தமிழகத் தேர்தல் களம் மேலே சொன்ன திருவிழாக் காட்சியாகத்தான்
காட்சிப் பட்டது.

...தி.மு. வை தவிர அனைத்துக் கட்சிகளும் மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் எனக் கூக்குரல் போட்டன.

பிரதானப் பெரிய கட்சி தி.மு., முன்மொழிந்தது. "ஆளும் . . தி.மு. விற்கு" மாற்றம் நாங்கள்தாம் என்று.

காங்கிரஸ் , யூனியன் முஸ்லிம் லீக், .மு.மு., தவிர்த்த பிற அனைத்துக்
கட்சிகளும், ...தி.மு., மற்றும் தி.மு. ஆகிய இரண்டையும் தவிர்த்து மாற்றம் தேவை என்ற பிரச்சாரத்தை முன் வைத்தன.

இந்தத் தேர்தல் களத்தில் மாற்றம் என்ற கோட்பாடே மகத்தான வேத மொழி போல் உச்சரிக்கப் பட்டது.

மக்கள் நலக் கூட்டணி மட்டுமே இந்த மாற்றம் என்ற கோட்பாட்டை
துவக்கத்தில் தெளிவான முறையில் முன்வைத்தது.

அரசியலில் பழுத்த பழம் மு. கருணாநிதி ஒரே அறிவிப்பில் மாற்றம்
என்ற சொல்லின் பொருளையே மாற்றி விட்டார்.

இந்தப் பாணி , தமிழக அரசியலில் அவர் அனுபவத்தின் மூலம் கண்டெடுத்த
வழக்கமான கொச்சை அனுபவம்தான்.

எல்லாக் கட்சிகளும் மாற்றம் என்று சொல்லும் பொழுது, "முழுவதுமாகத்
துடைத்தெடுத்தல்" என்ற சரியான பொருள் கிடைத்தது.

அதாவது ...தி.மு. வும், தி.மு. வும் எல்லாவகையிலும் சகோதரத் தன்மை கொண்டவைகள்தாம் ஊழலானாலும் சரி நிர்வாகச் சீர்கேடானாலும் சரி சுரண்டலானாலும் சரி அவைகள் தாயத்தார் உறவு முறைகள்தாம். எனவே அவைகளுக்கு மாற்றம் வேண்டும் என்று சொல்லும் போது, மாற்றம் என்ற சொல் சரியான சொல்லாகப் பயன்பட்டது.
கருணாநிதி, திடீரென்று ஒரு குண்டைத் தூக்கி எறிந்தார். . ..தி.மு. விற்கு மாற்றம் தி.மு..தான் என்றார்.

சுருக்கமாக இளைய தம்பிக்கு மூத்த அண்ணன் மாற்றம் என்றார்.

இந்தச் சகோதரர்களே தவறானவர்கள் .இவர்கள்தான் மாற்றப்பட வேண்டும்
என்ற நியாயமான மாற்றத்தின் உச்சந் தலையில் கருணாநிதி கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார்.

மாற்றம் என்ற சொல்லின் பொருள் தன்னைத் தற்கொலை செய்து கொண்டது. ...தி.மு. விற்கு நாங்கள்தான் சரியான எதிரிகள் என்று குறுகிய பொருளில் மாற்றம் என்ற ஆழமான பொருள் சுருங்கிப் போய் விட்டது.

தி.மு. விற்கு, ...தி.மு. எதிர்முகாம். ...தி.மு. விற்கு, தி.மு. எதிர் முகாம் என்றொரு பழைய திசையைக் கருணாநிதி சுலபமாகக் காட்டி விட்டார்.
 
தேர்தல் களம் சிதறத் தொடங்கியது.

பிற கட்சிகள் தி.மு. பக்கமோ, ...தி.மு. பக்கமோ போய் விடக் கூடாது என்ற தேர்தல் யுக்தி மற்ற கட்சிகளின் மண்டைக்குள் குடைய ஆரம்பித்து விட்டது.

இதன் விளைவால்தான், துவக்கம் முதல் சரியாகப் பயணப் பட்ட மக்கள் நலக் கூட்டணிக்குப் பார்வைக் கோளாறு வரத் துவங்கியது.
தமிழக அரசியல்வாதிகள் தவறான பார்வையை விஜயகாந்தின் தே.மு.தி. மீது வைத்திருந்தனர். 8 % இருந்து 10%வாக்கு அவர்களுக்கு இப்போதும் இருப்பதாக ஒரு போலிக் கற்பனையில் கிடந்தார்கள். ஆனால் உண்மையில் விஜயகாந்திற்கு அந்தச் செல்வாக்கு இல்லை.

விஜயகாந்திற்கு ஆரம்பக் காலங்களில் அப்படி இருந்தது உண்மை. அடுத்து வந்த காலங்களில் அவருக்கு அது இல்லை என்பது அதைவிட உண்மை.
தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு.

" கொக்கு எறிந்த கல்லை மடியில் கட்டித் திரிந்தது போல" என்பதுதான் அந்தப் பழமொழி.

ஒருவன் குளத்துக் கரையில், இரைதேடிக் கொண்டிருந்த கொக்கின் மீது கல்லை விட்டு எறிந்தானாம். அது கொக்கின் மீது பட்டுக் கொக்கு விழுந்து விட்டது.

சிறிது நேரங் கழித்து மீண்டும் இன்னொரு கொக்கின் மீது வேறொரு கல்லை எறிந்தானாம். ஆனால் இந்தக் கொக்கு பறந்து போய் விட்டதாம். பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னான் . இந்தக் கற்களால் கொக்கைக் கொல்ல முடியாது. முதலில் கொக்கு எறிந்தாயே அந்தக் கல்தான் கொக்கெறியும் கல். அதை எடுத்து வந்து எறி என்று.

கொக்கு எறிந்தவனும் கொக்கு விழுந்த இடத்தில் போய் ஒரு கல்லை எடுத்து வந்து அதுதான் கொக்கெறியும் கல் என முடிவு செய்து அதைக் கவனமாக மடியில் கட்டிக் கொண்டு கொக்கைத் தேடித் திரிந்தானாம்.
இந்தக் கொக்கெறிந்த கல்தான் விஜயகாந்த். இந்தக் கல், தி.மு. வசமோ,
காங்கிரஸ் இடமோ, பா.. பக்கமோ போய் விடக் கூடாது என்னும் முனைப்பில் மக்கள் நலக் கூட்டணி ஓடி ஓடிச் சென்று அந்தக் கொக்கெறிந்த கல்லைத் தன் மடியில் கட்டிக் கொண்டது.

மக்கள் நலக் கூட்டணி அதுவரை முன் வைத்து வந்த மாற்றம் எனும் உண்மைப் பொருளை மதிப்பிழக்கச் செய்து விட்டது. மக்கள் மத்தியில் எதிரணி என்ற சிந்தனை வந்து விட்டது.

"இந்த அணி வேண்டுமா? அந்த அணி வேண்டுமா? " என்கிற விளையாட்டுக் குணம் சிந்தையில் நிரம்பி விட்டது.

கருணாநிதி மாற்றத்தின் பொருளை மாற்றி விட்டார். அதற்குத் தோதாக
மக்கள் நலக் கூட்டணி கொக்கெறிந்த கல்லை மடியில் கட்டித் தன்னை மாற்றிக் கொண்டது.

"இளைய தம்பிக்கு ( ...தி.மு. ) வெற்றி. மூத்த அண்ணனுக்கு (தி.மு. ) அதைவிடக் குறைந்த வெற்றி என்ற முடிவைத் தேர்தல் களம் இறுதியில் வழங்கி விட்டது.

உனக்கு எதிரணி நான். எனக்கு எதிரணி நீ, எனும் பிம்பம் வெளிப்பட்டு விட்டது.

நாளையத் தமிழகச் சட்ட மன்றம் குடும்பச் சண்டை போடுவது போல்
பொய்ச் சண்டை போட்டுக் கொள்ளும். திரைக்குப் பின் பங்கு போட்டுக் கொள்ளும் உண்மைப் பங்காளிகளாகத்தான் இருக்கும்.

நிறுத்தி வைக்கப் பட்ட இரு தொகுதி தேர்தல்களின் தேதி நீதிமன்ற ஆலோசனையால் மாற்றி வைக்கப் பட்டதற்கு நேரடியாக வீதிக்குப் போராட வரப் போகிறாராம் கருணாநிதி.

இனிமேல் இப்படித்தான் தி. மு . செயல்படும் என்பதை ...தி.மு. விற்கு மறைமுகமாக அறிவித்து விட்டார்.

புழக்கடை வழியாக பேரம் பேச தயார் எனும் அறிவிப்பு வந்தாயிற்று.
இதற்கு ஒரே மாற்றம். மாற்றம் என்ற சொல் அதனின் உண்மைப் பொருளில் மக்கள் மத்தியில பிரச்சாரப் படவேண்டும்.