Thursday, June 30, 2016

பொல்லாத பூர்வீகம்....! ( 2 )



தமிழகத்தில் சைவ நெறி தன் தத்துவத்தைப் பேணிப் பாதுகாத்து வந்த காலத்தில் அமைதியும், நிம்மதியும், வளர்ச்சியும் செழித்திருந்தது.

அதேபோல் சமணத் தத்துவமும் அமைதியான ஒரு வாழ்க்கை முறையை இங்கே வழங்கிக் கொண்டிருந்தது.

புத்தமும் மன நிறைவோடு நடமாடிக் கொண்டிருந்தது.
 
இன்னும் ஏராளமான மதத் தத்துவங்கள் தங்கள் தங்கள் கோட்பாடுகளை
வீதியெங்கும் விதைத்து வந்தன.

சைவத்தை நேசித்தவர்கள் சைவத்தில் இணைந்து கொண்டார்கள். சமணத்தைப் நாடியவர்கள் சமணத்தில் சேர்ந்து கொண்டார்கள். புத்தத்தை விரும்பியவர்கள் புத்தத்தில் சங்கமித்துக் கொண்டார்கள். மனிதர்கள் தங்களுக்கு ஏற்ற தத்துவத்தைத் தழுவிக் கொண்டார்கள்.

இந்திய யூத மதத்திற்கு இது ஆபத்தாகத் தெரிந்தது. இங்கே இவ்வளவு அமைதி சூழ்ந்தால், தங்கள் தலைமைக்கு வாய்ப்பு வந்து வாய்க்காது எனத் தீர்மானித்தது. இவர்கள் மோதிக் கொண்டால் அந்த களேபரத்தில் தங்கள் தலைமை உறுதியாகும் என முடிவு கட்டியது.

அதுவரை தங்கள் தத்துவங்களைப் பிரச்சாரம் செய்து, வாழ்வு முறை வெளிப்படுத்தி வந்த தத்துவங்களுக்கு இடையே, எவர் தத்துவம் பெரியது? யார் வாழ்வு முறை தனித்துவமானது? எனப் புதிய போக்கை முன் வைக்க இந்திய யூதம் கற்றுக் கொடுத்தது.

தங்கள் தத்துவங்களைப் பேணுவதற்குப் பதிலாக அடுத்து தத்துவங்களுக்குப் பகையாக எல்லாத் தத்துவங்களும் மாற்றப் பட்டன.
சைவ, சமணப் படுகொலைகள் எல்லாம் இங்கே நிகழ்ந்த வரலாற்றின் பின்னணி இதுதான்.
 
சைவ, வைணவக் கோரத் தாக்குதல்களுக்கு எல்லாம் அடித்தளம் இதுதான்.
இந்திய யூத மத வெற்றிக் கோட்பாடே, சகலரையும் எதிராளியாக்கி மோதிக் கொள்ள விட்டுத் தங்களை மேன்மை படுத்திக் கொள்வதுதான்.

இந்தியத்தில் இருந்த எல்லா வாழ்க்கை முறைகளையும் ஒன்றிணைத்து, ஒரு உயர்ந்த தருமத்தை உருவாக்கி விட்டதாகச் சொல்லிக் கொண்டே தலைமை பீடத்தை மட்டும் தம் பக்கமே வைத்துக் கொண்டார்கள்.

எப்பொழுதெல்லாம் தங்களுக்குச் சிக்கல் வருகிறதோ? அப்போதெல்லாம் தங்களுடைய தத்துவ வாழ்க்கைக் கடைப்பிடிப்புகளைப் பிரச்சாரப் படுத்தாமல், மக்களுக்கிடையே பிரிவினைகளையும், கோரக் கொடூரத்
தாக்குதல்களையும், கொலைக்களத் தாண்டவங்களையும் சர்வ சாதாரணமாக நிகழ்த்தித் தங்கள் தலைமையைப் பவித்ரமாகப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

இதுவேதான் இந்திய யூத மத நடைமுறை. உலக யூத மத மூலாதார நடைமுறையும் இதுவேதான்.

இந்திய யூத மதத்தின் மடிப்பிள்ளைதான், R.S.S.

எப்போதெல்லாம் R.S.S.கவனிக்கப் படாமல் புறக்கணிக்கப் படுகிறதோ, அப்போதெல்லாம் மதக் கலவரம் தலைதூக்க ஆரம்பிக்கும். இனக் கலவரத்துக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படும். ஜாதிய தாக்குதல் உருவாக்கப்படும். முடிவில் R.S.S.கோட்டையின் தலைமை ஊர்ஜிதப் படுத்தப்படும்.

இந்து தர்மம், பல உன்னதமான வாழ்வுத் தத்துவங்களால் பல ஆயிரம் ஆண்டுகள் கண்டுள்ள உயரிய அரிய வாழ்வு முறை கொண்டது. அன்பு மயமான அரவணைப்பு கொண்டது.அமைதியும் நிம்மதியும் நிறைந்தது.
இந்தத் தர்மத்தைக் குலைக்க முடிவு கட்டிய இந்திய யூத மதம், ஒரு புதிய கலப்புத் தத்துவத்தை முன்வைக்கிறது, அதுதான் இந்துத்துவா.

இந்து மதம் வேறு, இந்துத்துவா முற்றிலும் வேறு.

இந்து தர்மம் பழமையான உயரிய நன்னெறி சான்ற அமைதித் தத்துவம்.
இந்துத்துவா என்பது இந்திய யூத மதத்தின் பொல்லாத மூளையின்
கலவைக் கொலை வெறிக் கோரத் தத்துவம்.

R.S.S. எனற இந்திய யூத மதம் தன்னைத் தக்கவைக்க வேண்டுமானால், அதன் ஆபத்தான கண்டு பிடிப்பான இந்துத்துவா எனும் கோரக் கொலை வெறி ஆயுதத்தைத் தனது கைவசம் எடுத்துத்தான் ஆகவேண்டும்.

தற்கால அதன் உயிர் வாழ்க்கைக்கு அதுவே முற்றும் முடிவான தீர்வாகும்.
இதனை உருவாக்க R.S.S. ஜனசங்கத்தைப் பெற்றெடுத்தது. அந்த ஜனசங்கம் பாரதீய ஜனதா எனப் பரிணாமம் கண்டுள்ளது.

படு கொலைகளையும் பயங்கர தாக்குதல்களையும் நிகழ்த்தி இந்திய மக்கள் ஒற்றுமையைக் குலைத்து மதவெறி நெருப்பை இலவசமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறது, R.S.S.

இந்துத்துவா என்கிற பெயரில் கொலைக் கருவி தயாராகும் போது, அந்தக் கருவிக்கு எதிர் கருவியாக முஸ்லிம் தீவிரவாதம் என்கிற படு பாதகக் கொலைக் கருவியும் தயாராகி விடுகிறது. மதம் என்னும் குணப்பாடே
இப்படித்தான் இருக்க முடியும். முடிவு என்னவோ அழிவுதான்.  

வாழ்வென்னவோ இந்திய யூத மதத்துக்குத்தான்.

கொலைக் கருவிகள் தயாராகி விட்டன. கொலைக் களங்களோ சிந்தும் ரத்தங்களை விழுங்கிக் கொண்டே இருக்கின்றன.இந்திய மக்கள் குரோத, விரோத புகை மூட்டத்துக்குள் பூரணமாகப் புதையுண்டிருக்கிறார்கள்.

இந்திய யூத மதம் மீண்டும் தன் தலைமையைத் தக்க வைத்துக் கொள்கிறது. 

பொல்லாத பூர்வீகம்...! ( 1 )



இன்றையப் பா..., நேற்றைய ஜனசங்கத்தின் திருட்டுப் பிள்ளை. நேற்றைய ஜனசங்கம் முந்தைய R.S.S யின் அடையாளம் மறைத்து வந்த
வளர்ப்பு பிள்ளை.

R.S.S. தோன்றிய விதமே மகத்தான கோளாறுப் பிரதேசம்.

பாலஸ்தீனத்தின் பயங்கர யூத தர்மம் இந்தியத்திற்குள் முகமூடி போட்டு உள் நுழையத் தனக்குத்தானே சூட்டிக் கொண்ட திருநாமம்தான் R.S.S., என்பது.

இந்தியத்திற்குள் பழம்பெரும் அரிய தத்துவ வழிபாடுகள், காலம் குறித்து அளக்க முடியாத யுகாந்திரங்களுக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கின்றன. அவைகள் அங்கங்கே ஆண்டு வந்த பழங்குடி மக்களின்
வாழ்வு அனுபவங்களாகவும் இருந்திருக்கின்றன.

உலக வரம்பிலே கூட இந்தப் பூமியின் வாழ்வுத் தத்துவம்தான் முந்தியது. மூத்தது.

இந்த உயரிய வாழ்வு முறையை கபளீகரம் பண்ண சிந்து சமவெளி வழியே
இங்கே வந்த வடிவம் மாறிய, யூத இனம் ராஜதந்திரங்களைக் கையாண்டு
வெற்றி பெற்றது.

தாங்கள் ஏற்கனவே கைவசம் கொண்டு வந்திருந்த யூத வர்க்கக் கோட்பாடுகளுக்குக் கண்,காது,மூக்கு, கை, கால்களை ஒட்டி வைத்துப்
புதிய உருவம் சமைத்தது.

இந்த மண்ணின் பூர்வீக வழிபாட்டுத் தன்மைகள் அந்த வடிவத்துக்குள்
கலந்து கரைக்கப் பட்டுவிட்டன.

ஒரு புத்தம் புது மதக் கோட்பாடு தயாராகி விட்டது.

பிறப்புகள் பற்றி பழைய யூத மதம் வைத்திருந்த கொள்கைகளை இந்த மண்ணிலே புதுத் தத்துவமாகப் பரவ விட்டது. இதுதான் பழைய இந்தியப் பூர்வீகத் தத்துவம் எனச் சாதித்தது. நம்பவும் வைத்து விட்டது.

பிறப்பு நான்கு வகை. உயரிய அந்தணப் பிறப்பு, அடுத்த அரசப் பிறப்பு,
தொடர்ந்து வணிகப் பிறப்பு, இறுதியான இழிநிலைப் பிறப்பு. இப்படி ஒரு ஏற்பாட்டை முன்னிறுத்தி, இவர்களுக்குத் தொழில்களைத் தீர்மானித்துக் கொண்டு இங்குள்ள மக்களை இப் பட்டியலுக்குள் அடக்கி, ஒரு வாழ்வு முறையை " இதுதான் இங்குள்ள பிரதான வாழ்வு முறை " என்பது போல பிரபகண்டாப் படுத்தி, உறுதி செய்து விட்டது.

இன்று கூட யூத மதத்தில் எந்த மனிதரும் விரும்பிச் சென்று சேர்ந்து விட
முடியாது. அதைப் போல்தான் பிராமண மதத்திலே எவரும் விரும்பிச் சென்று சேர்ந்து விட முடியாது.

யூதத்தில் பிறக்கத்தான் முடியும்.ஏனென்றால் அது புனிதம் நிறைந்த பிறப்பு.
பிராமணத்திலும் பிறக்கத்தான் முடியும். இதுவும் புனித மிக்கப் பிறப்பு.
இந்த இரு மதமும் உலகின் ஏக போகத் தெய்வத் தரிசன மதங்கள்.

மற்ற வர்ணங்கள் இவர்களுக்குத் தரத்திற்குத் தக்கப் பணியாளர்கள். இதுதான் பாரசீக யூதம் இந்த மண்ணில் ஆதி காலத்தில் இருந்து நடத்த முனையும் தீவிர கலாச்சாரம் ஆகும்.

யூத மதம் தன் கட்டுக் கோப்பில் வைத்திருந்த புராண இதிகாசக் கதைகளை
எல்லாம் இந்த மண்ணிலே அங்கொன்று இங்கொன்றுமாக வெட்டிச் சேர்த்து
இந்திய மூலக் கதைகளாக நிறுவிக் கொண்டது. இக் கதைகளில் பலப்பல அற்புதமான வாழ்வியல் தத்துவங்கள் அலாதியாக இருக்கத்தான் செய்கின்றன.
 
மகா பாரதக் கதைகள், ராம காதைச் செய்திகள்,கிருஷ்ண சரித்திர சம்பவங்கள், புனைவுகளாகிய இவை அனைத்தும் யூத மதக் கதைகளின்
நிழல் வடிவங்கள் என்பதை மறந்து விட முடியாது.

அதனால்தான், கோல்வால்கர் இப்படிக் குறிப்படுகிறார், "பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்து பிற பிறப்பாளர்கள்( ஜாதியினர் ) பணி செய்தே தீர வேண்டும். இதனை நாம் நிலைநிறுத்த வேண்டும்.அதுதான் தர்ம வாழ்க்கை," என்று சொல்கிறார்.

இந்திய யூத மதம் ( பிராமணீய மதம் ) சுற்றியுள்ள நல்ல தத்துவங்களை எல்லாம் அள்ளி அள்ளி விழுங்கிக் கொண்டு தனக்குள் ஜீரணித்துத் தன்மயமாக்கிக் கொள்வதில் வல்லமை பெற்றிருக்கிறது.

இந்த நட்டில் இருந்த முருக, மற்றும் தாய் தெய்வ வழிபாட்டு முறைகளை,
அதைத் தொடர்ந்து வந்த சைவ நெறிகளை, இவற்றிலிருந்து முரண்பட்ட
சமண குணாம்சங்களை, இன்னும் மாறுபட்ட புத்தத் தத்துவங்களை, தனதாக்கிக் கொண்டு, "எல்லாமே யாம்தாம்" என உரு மாறிக் கொண்டது.

நம் மண்ணிற்கு வந்த பழைய யூத மதம் தன்னுடைய நடை முறைகளை
வைணவ சம்பிரதாயங்களாக இங்கே கடை பிடித்து அதனையும் தன் கூட்டு வடிவத்திற்குள் கொண்டு வந்து சேர்த்து விட்டது.

இந்த ஒருங்கிணைப்பின் போது, மிகச் சாதுரியமாக இவர்களுக்குள்ளேயே
மோதிக் கொள்ளக் கூடிய காரணங்களையும் கற்பித்துத் தந்தது.
சைவத்தைச், சமணத்தோடு மோதவிட்டது. சமணத்தைப் புத்தத்தோடு உரச விட்டது. வைணவம் இத்தனையையும் அடக்கத் தலைப்பட்டது. இந்தப் போராட்டங்களினால் மிகப் பெரிய வரலாறு சிதைக்கப்பட்டது.

நமது பூர்வீகம் தொலைந்து போனது. இந்திய யூத வர்ணம் நம்மை ஆட்சி செய்தது.

இந்த நடைமுறையில் இருந்து ஒரு புதிய வரலாற்று நெறி முறையை
இந்திய யூத வர்ணம் கண்டு பிடித்தது.

" தாங்கள்தாம் எல்லாம் என்ற தத்துவம் உறுதிப்பட வேண்டுமானால் வர்க்கங்களுக்கு இடையே எதிர் எதிர் போர் முகாம்களை அமைத்துக் கொடுத்து அவைகளைத் தங்கள் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் பூரணமான ராஜதந்திரம்" என்ற தத்துவத்தை நடைமுறைப் படுத்தியது.