Wednesday, May 29, 2013

தமிழகத்தின்  வீதியெல்லாம்
ரத்தஆறு வழிகிறது!
உமிழ்ந்துவிட்ட சக்கைகளாய்
மனிதஉயிர் அழிகிறது!

விண்னைமுட்டிச் செவ்வாயில்
மேலைநாட்டான் நுழைகிறான்
மண்ணைவெட்டித் தன்னினத்தை
தமிழனிங்கே புதைக்கிறான்!

அண்ணன்தம்பி உறவையெல்லாம்
ஆயுதத்தால் பறிக்கிறான்!
அண்டைவீட்டுக் காரனையும்
குண்டைவீசி வதைக்கிறான்!

கையைத்தொட்டு அரவணைத்தால்
தீட்டுயென்று கொதிக்கிறான்!
கள்ளுக்கடைக் குள்ளேமட்டும்
சமத்துவமாய்க் குடிக்கிறான்!

ஆயுதங்கள் நமைஅழிக்கும்
அறியாமை ஒழியட்டும்!
ஞானம்வந்து நம்தலையில்
மகுடமாக அமரட்டும்!

No comments:

Post a Comment